ஆஸி பந்துவீச்சாளர் ஸ்டார்க்-க்கு ஆதரவாக பேசிய விராட் கோலி

johnson

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துவிட்டது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இதனால் இந்திய அணி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஏமாற்றத்துடன் ஒருநாள் தொடரை எதிர்நோக்கி உள்ளனர்.

pujara

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் ஆட்டம் குறித்து விமர்சங்கள் எழ துவங்கியுள்ளன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன் குறிப்பிடுகையில் : ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணியின் முதன்மை பந்துவீச்சாளர் ஆவார். அவர் இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி இருக்கவேண்டும். ஆனால், அவர் அதனை செய்ய தவறி விட்டார்.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவர் வேகம் கொண்டு பந்துவீசி இருந்தால் விரைவில் ஆட்டம் இழந்து இருப்பார்கள். ஆனால், ஸ்டார்க் சரியான லென்த் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை பிடிக்க தவறி விட்டார். அதனாலே அவரது பந்துவீச்சு எடுபடாமல் போனது. சிறப்பான பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியில் இருந்தும் இந்திய அணியின் விக்கெட்களை வீழ்த்த கடினமாக இருந்தது எனக்கு சற்று ஏமாற்றத்தினை அளித்தது என்று ஸ்டார்க் பற்றி தனது கருத்தினை ஜான்சன் தெரிவித்தார்.

aus

இந்நிலையில் ஸ்டார்க்கு ஆதரவாக கருத்தினை வெளியிட்டுள்ளார் இந்திய அணியின் கேப்டன் கோலி. அதில், கோலி கூறியதாவது: ஸ்டார்க் மிகசிறந்த பந்துவீச்சாளர் அதில் சந்தேகம் இல்லை. இந்த ஒரு தொடரில் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை என்றால் அவரது தரம் குறைந்துவிடுமா என்ன? இந்த ஒரு தொடரை மட்டும் பார்க்காமல் அவரது முதல் தொடரில் இருந்து இன்றுவரை பாருங்கள் அவரது சிறப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும் என்று தனது கருத்தினை தெரிவித்தார் கோலி.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு – BCCI

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்