புதிய காதல் : காதலர் தினமான இன்று தனது புதிய காதலை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா – என்ன ஒரு லவ் ரோஹித் உங்களுக்கு

Rohith-Sarma
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முடித்துவிட்டு தாயகம் திரும்பியுள்ளது. ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வென்ற இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை (2-1) என்ற கணக்கில் இழந்தது.

rohith

இதற்கடுத்து இந்திய அணிக்கு சில நாட்களே ஓய்வு ஏனெனில், இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 ஆகிய தொடர்கள் இருப்பதால் இந்திய அணி வீரர்கள் தற்போது ஓய்வினை எடுத்து வருகின்றனர். காதலர் தினமான இன்று ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய காதலை பற்றி பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மாவிற்கு கடந்த டிசம்பர் மாத இறுதியில் பெண் குழந்தை பிறந்தது. அப்போது சிறிது நாட்கள் குழந்தையை காண வந்த ரோஹித் மீண்டும் நியூசிலாந்து தொடருக்காக அணியில் இணைந்தார். காதலர் தினமான இன்று ரோஹித் சர்மா தனது குழந்தையுடன் இருக்கும் ஒரு அழகான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு :

- Advertisement -

ஏற்கனவே, தனது குழந்தையுடன் விளையாடும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ரோஹித் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

மீண்டும் கேப்டனாக களமிறங்க போகும் தல தோனி. பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு – ஆதாரம் இதோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -