நானும் உங்களை நோக்கி வருகிறேன் – தோனி மற்றும் கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ரோஹித் சர்மா

rohith

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Krunal

அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.

இந்த போட்டி ரோஹித் சர்மாவிற்கு கேப்டனாக டி20 14ஆவது போட்டியாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கேப்டனாக 14 போட்டிகளில் 12 போட்டிகளை வென்றுள்ளார். தோனி டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்தபோது முதல் 14 போட்டிகளில் 8 போட்டிகளில் மட்டுமே வெற்றியை ருசித்துள்ளார்.

koli-dhoni

அதேபோல், தற்போது உள்ள கேப்டனனான விராட் கோலி முதல் 14 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றிருந்தார். எனவே, கேப்டனாக தோனி மற்றும் கோலியை தாண்டி தானும் ஒரு கேப்டனாக தன்னை நிரூபித்துள்ளார் ரோஹித் சர்மா.

இதையும் படிக்கலாமே :

முக்கிய செய்தி : நாளைய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரேயான மூன்றாவது டி20 போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு – பிட்ச் ரிப்போர்ட் இதோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்