இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.
நேற்றைய போட்டியில் ரோஹித் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரி என 50 ரன்களை குவித்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார். மேலும், டி20 போட்டிகளில் 4 சதம் அடித்த ஒரே வீரர் மற்றும் 20 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சிறப்பினையும் பெற்றார்.
டி20 போட்டிகளில் இதுவரை 2288 ரன்கள் குவித்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் அவர் நேற்றைய போட்டியின் மூலம் படைத்தார்.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்