இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற இவைகளே காரணம். மேலும், அடுத்த போட்டியிலும் தெறிக்க விடப்போகிறோம் – ரோஹித் தடாலடி

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Team

அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரங்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.

- Advertisement -

இந்த வெற்றி குறித்து பேசிய ரோஹித் : இன்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டுமே சிறப்பாக அமைந்தது. சென்ற போட்டியில் அடைந்த தோல்வியை பற்றி நான் வீரர்களிடம் பேசவே இல்லை. இது நீண்ட தொடராகும் எனவே, அணிக்குள் சுமூகமான சூழல் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அதனால் வீரர்களுக்கு நான் பிரஷர் கொடுப்பதில்லை.

shikhar

அதனை புரிந்து கொண்டு அவர்களும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெற்றி தேடி தந்துள்ளனர். பாண்டியா சகோதரர்கள் சிறப்பாக பந்துவீசினர். இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்த போட்டியை தெறிக்க விடப்போகிறோம் என்றும் இருப்பினும் நியூசிலாந்து ஜெயிக்கவும் வாய்ப்பு இருக்கிறது அவர்கள் பலம் வாய்ந்த அணி என்றும் ரோஹித் கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

என்னப்பா இது. டி20 அணியில் இடம் கிடைக்காததால் மைதான கேமரா மேனாக மாறிய குல்தீப் யாதவ் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -