என்னப்பா இது. டி20 அணியில் இடம் கிடைக்காததால் மைதான கேமரா மேனாக மாறிய குல்தீப் யாதவ் – வீடியோ

Kuldeep

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. இதனால், இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Team

அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரங்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்த போட்டியில் இடம் பெறாமல் இருந்த குலதீப் யாதவ் தீடிரென்று போட்டியை படம்பிடித்து கொண்டிருந்த கேமரா மேனிடம் சென்று பேசி அவர் கேமராமேனாக மாறினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி (1-1) என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளது. நாளை மறுதினம் (10-02-2019) அன்று கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

பவுண்டரி லைனில் இருந்து கில்லியாக த்ரோ அடித்து ரன் அவுட் செய்த விஜய் ஷங்கர் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்