குறைவான ஸ்கோர் அடித்தும் இவர்கள் சிறப்பாக ஆடியதால் வெற்றி பெற்றோம் – ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டன் நகரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. போட்டியிலும் முதல் 10 ஓவர்களில் இந்திய அணி சரியாக விளையாடாமல் முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது.

rohith

பிறகு பின்வரிசை வீரர்களின் அதிரடியால் இந்திய அணி 252 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் ராயுடு 90, ஷங்கர் மற்றும் பாண்டியா 45 ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து பாண்டியா ஹென்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு நியூசிலாந்து அணி 253 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து விளையாடியது. நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

(4-1) என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் : இந்த போட்டியில் முதலில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால், ஷங்கர் மற்றும் ராயுடு ஆகியோரது கூட்டணியால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. மேலும், அதிரடியாக ஆடிய ஹார்டிக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கினார்.

மேலும், அணைத்து வீரர்களும் வெற்றிக்கு தேவையான சமயத்தில் சரியான முறையில் விளையாடினர். இது ஒரு டீம் வெற்றி என்றே நான் கருதுகிறேன் என்று கூறினார் ரோஹித். ஆட்டநாயகன் விருது ராயுடுவும் , தொடர் நாயகன் விருது ஷமிக்கும் கிடைத்தது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

வெற்றிக்கோப்பையினை இளம்வீரரிடம் கொடுத்து கொண்டாட சொன்ன தோனி மற்றும் ரோஹித் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -