நாங்கள் தவறவிட்டோம் மாற்றி கூற எதுவும் இல்லை . தோல்விக்கு காரணம் இதுவே – ரோஹித் ஓபன் டாக்

rohith-sad
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Team

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முன்ரோ 40 பந்தில் 72 ரன்கள் குவித்து அசத்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த இமாலய இலக்கினை துரத்திச்சென்ற இந்திய அணி அதிர்ஷ்ட வசமின்றி வெறும் 4 றன் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

- Advertisement -

போட்டி முடிந்ததும் தோல்வி குறித்து பேட்டி அளித்த ரோஹித் : மிகுந்த ஏமாற்றமாக உள்ளது வெற்றிக்கோட்டிற்கு மிக அருகில் சென்று அதனை தவறவிட்டோம். 210 ரன்களுக்கு மேல் இலக்கு என்றால் எப்போதும் கடினமான ஒன்றாகவே இருக்கும். ஆனால், நாங்கள் இறுதிவரை போராடி நியூசிலாந்து அணியிடம் தோற்றோம். அவர்கள் பதட்டத்தோடு வெற்றியை ஈட்டினார்கள்.

Dinesh

மேலும், ஒருநாள் போட்டிகளில் நன்றாக ஆட்டத்தினை முடித்துவைத்தோம் அதனை செய்ய டி20 போட்டிகளில் தவறவிட்டோம். இருப்பினும் இது ஒரு நல்ல போட்டி நிறைய அனுபவமும் கொஞ்சம் குறைபாடுகளையும் கற்றுக்கொண்டோம். மேலும், வெற்றியுடன் இந்திய சென்று ஆஸ்திரேலிய தொடரை விளையாடலாம் என்று நினைத்தோம் அதிர்ஷ்ட வசமின்றி அந்த வாய்ப்பினை தவறவிட்டோம் என்று ரோஹித் கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

தேசியக்கொடி ஏந்தி மைதானத்திற்குள் ஓடிவந்த தோனி ரசிகன். மெய்சிலிர்க்க வைக்கும் செயலை செய்த தல தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -