- Advertisement -
Homeவீட்டு தோட்டம்வீணாக கீழே தூக்கிப் போடும் இந்த பொருள் இருந்தா போதும் அதை வைத்தே உங்க ரோஜா...

வீணாக கீழே தூக்கிப் போடும் இந்த பொருள் இருந்தா போதும் அதை வைத்தே உங்க ரோஜா செடியில் ஒரு இலை கூட வாடாம கொத்துக் கொத்தாக பூக்களை பூக்க வைத்து விடலாம்.

- Advertisement -

ரோஜா செடியை பொறுத்த வரையில் பராமரிப்பு குறைவாக இருந்தாலும் அதில் பூச்சி தாக்குதல், இலை வெட்டு போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வந்து விடும். இதனால் செடிகள் பட்டு போய் பூக்காமல் இருந்து விடும். ஒரு சில செடிகளில் மொட்டு வைத்த பிறகு மொட்டுக்களிலும் இந்த பூச்சிகள் வந்து பூக்கள் பெரிதாக மலராமல் மொட்டிலே கருகி உதிர்ந்து விடும். இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய நாம் சமையலுக்கு பயன்படுத்திய பின்பு வேண்டாம் என தூக்கி போடும் எலுமிச்சை தோலை வைத்து ஒரு அருமையான உரத்தை தயார் செய்யலாம். அது எப்படி என்பதை இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரோஜா செடியின் பூச்சி தாக்குதலை சரி செய்ய இயற்கையான உரம்:
இந்த உரத்தை தயாரிக்க நமக்கு எலுமிச்சை பழ தோல் மட்டும் இருந்தாலே போதும். நாம் சமையலுக்கு பயன்படுத்திய பிறகு தேவையில்லை என தூக்கி போடும் இந்தத் தோல் அல்லது சில நேரங்களில் வீட்டில் எலுமிச்சை பழங்கள் காய்ந்து அழுகி இருக்கும் அது போன்ற பழங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டும் இன்றி ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரிக் உள்ள பழங்களின் தோள்களையும் இந்த உரத்தை தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது எலுமிச்சை பழ தோல் ஒரு கப் அளவு எடுத்துக் கொண்டால், அதற்கு கால் கப் அளவு நாட்டுச் சர்க்கரை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒரு மூடி போட்டு பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி நன்றாக குலுக்கி வைத்து விடுங்கள். இதை வாரத்திற்கு ஒரு முறை லேசாக திறந்து காற்று வெளியேறியது மறுபடியும் மூடி வைத்து விட வேண்டும்.

அதே போல் இதை நிழல் பாங்கான இடத்தில் தான் வைக்க வேண்டும் வெயில் படும் இடத்தில் வைக்க கூடாது. அது மட்டும் இன்றி இந்த உரத்தை பிளாஸ்டிக் பாட்டிலை மட்டும் பயன்படுத்தி தயார் செய்து கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டிலை பயன்படுத்த கூடாது. ஏனென்றால் சில சமயங்களில் அது வெடித்து விடும் அபாயமும் உண்டு.

- Advertisement -

இதை இரண்டு மாதம் வரை அப்படியே வைத்து விட வேண்டும். அதன் பிறகு இதில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 ml மட்டும் இந்த உர தண்ணீரை கலந்து செடிகளுக்கு ஸ்பிரே செய்து விட்டால் போதும். ரோஜா செடிகளில் பூச்சி தாக்குதல் இலை உதிர்வு, செடி கருகி விடுதல் போன்ற எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. அது மட்டும் இன்றி அதிக அளவில் மொட்டுக்கள் வைத்து பூக்களும் நல்ல பெரிதாக பூக்க ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: ரோஜா செடியில் வெயில் காலத்தில் பூக்கள் பூக்கவே இல்லையா? இதை மட்டும் கொடுத்து பாருங்க கொத்துக்கொத்தா பூத்து தள்ளும்!

இதை ஒரு முறை நாம் தயாரித்து வைத்துக் கொண்டாலே போதும் ரோஜா செடியில் பல மடங்கு பூக்களை பெற முடியும். அதுவும் நாம் தேவையில்லை என்று தூக்கி கீழே போடும் பொருட்களை வைத்தே இதை செய்து விடலாம். இந்த உர தயாரிப்பு முறை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தால், நீங்களும் இதே போல தயார் செய்து உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளுக்கு கொடுத்து அதிகமாக பூக்களை பூக்க வைத்து மகிழுங்கள்.

சற்று முன்