ரோஜா செடியில் வெயில் காலத்தில் பூக்கள் பூக்கவே இல்லையா? இதை மட்டும் கொடுத்து பாருங்க கொத்துக்கொத்தா பூத்து தள்ளும்!

rose-roja-valai-poo
- Advertisement -

ரோஜா செடி வளர்ப்பவர்கள் அதை வெயில் காலத்தில் பராமரிப்பதை தான் சவாலாக கொண்டிருப்பார்கள். அதிக வெயில் காரணங்களினால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக கூடிய இந்த ரோஜா செடியை எப்படி வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்து, நன்கு செழித்து வளர செய்வது? பச்சை பசேல் என இலைகளை துளிர்க்க செய்து நிறைய பூக்களை பெறுவது? என்பதைத் தான் இந்த தோட்ட குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

ரோஜா செடிகள் பட்டு போய்விட்டால் உடனே அதை தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை. அதன் வேர் பகுதியிலிருந்து நாலு இன்ச் வரை தண்டு பகுதியை விட்டுவிட்டு மற்ற பகுதிகளை வெட்டி விடுங்கள். மண்ணை கிளறி தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள் மண்ணிற்கு சரியான ஆக்ஸிஜன் கிடைத்தால் தான் வேர்கள் நன்கு பிடிக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

புதிய தாளிர்கள் முளைக்கவும், நிறைய பூக்கள் பூக்கவும் ரோஜா செடிக்கு எப்பொழுதும் ஈரப்பதம் தேவை. அதிக அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை ஆனால் அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். ரோஜா செடிகள் புதிதாக மொட்டுக்கள் விடும் பொழுது, அதை வெட்டி விட்டுக் கொண்டே வாருங்கள். ஒரு ரெண்டு மாதத்திற்கு இது போல புதிய மொட்டுக்களை வெட்டிக் கொண்டே வந்தால் அது நிறைய கிளைகளை விட ஆரம்பிக்கும். மொட்டுக்களை அப்படியே விட்டு விட்டால் அது பூ பூக்க ஆரம்பித்து, கிளைகளை அதிகம் முளைக்க செய்யாது.

அதிக கிளைகள் முளைத்து, அதிக மொட்டுக்கள் வைக்கும் பொழுது நீங்கள் இந்த உரத்தை உபயோகப்படுத்தி பாருங்கள். எளிதாக வீட்டில் கிடைக்கக்கூடிய வாழைப்பூ இருந்தால் அதை சிறு சிறு துண்டுகளாக கத்தரித்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவை முழுதாக பயன்படுத்தினாலும் சரி அல்லது அதன் மீதம் இருக்கும் இலை பகுதிகளை பயன்படுத்தினாலும் சரி. சிறு சிறு துண்டுகளாக வெட்டிய பின்பு அதை ஒரு பக்கெட்டில் கொட்டி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு இரண்டு நாட்கள் வரை அதை நன்கு ஊற விட்டு விடுங்கள். வாழை பூவில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இரண்டு நாட்கள் ஆனதும் அதை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் சக்கைகளை மண்ணில் போட்டு உரமாக்கிக் கொள்ளலாம். இந்த வடிகட்டி வைத்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தேவையான அளவிற்கு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். ரோஜா செடிக்கு கிளைகள் மற்றும் வேர் பகுதிகளுக்கு இந்த பெர்டிலைசரை நேரடியாகவும், ஸ்ப்ரே செய்தும் கொடுக்க வேண்டும். கிளைகள் முழுவதிலும் எல்லா இடங்களிலும் படும்படி நன்கு ஸ்ப்ரே செய்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ரோஜா செடி வைக்க போறீங்களா? தொட்டியில் மண்ணை எப்படி தயாரிக்க வேண்டும்? இப்படி பண்ணிட்டு ரோஜா செடி வைங்க ஒரு கிளையிலேயே கொத்து கொத்தா பூக்கள் பூத்து தள்ளும்!

அது போல அரை லிட்டர் அளவிற்கு வேர் பகுதியை சுற்றிலும் ஊற்றி மண்ணை கிளறி விடுங்கள். இது போல செய்யும் பொழுது வேர்களுக்கும் நல்ல சத்து கிடைக்கும். இலை, தளிர் என்று எல்லாவற்றுக்குமே சத்துக்கள் கிடைத்து புதிய புதிய தளிர்களும், கிளைகளும் முளைக்க துவங்கும். இதனால் நிறைய பூக்களும் பூக்க ஆரம்பிக்கும். வெயில் காலத்திற்கு நல்ல ஒரு பெர்டிலைசராக இருக்கக்கூடிய இந்த வாழைப்பூ உரத்தை கண்டிப்பாக நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுடைய பூக்காத ரோஜா செடியும் சூப்பராக பூக்கும்.

- Advertisement -