ரோஸ் மில்க் பால்கோவா செய்யும் முறை

rose milk palgova
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றாடம் உபயோகப்படுத்திக் கொண்டுதான் வருகிறோம். அதேபோல் இனிப்பிற்கும் நம்முடைய தினசரி வாழ்க்கையில் முக்கிய பங்கு இருக்கிறது. அந்த வகையில் பாலையும் இனிப்பையும் சேர்த்து பால்கோவா செய்ய விரும்புபவர்கள் வித்தியாசமாக ரோஸ்மில்க் பால்கோவா செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பாலை வைத்து நாம் பல இனிப்பு வகைகளை செய்வோம். ஆனால் முதலில் ஞாபகத்திற்கு வருவது பால்கோவா தான். பால்கோவா மிகவும் பிரபலமான ஒன்றாக திகழ்கிறது. பால்கோவாவிற்கு என்றே ரசிகர் பட்டாளம் தனியாக தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பால்கோவாவை கடையிலிருந்து வாங்காமல் வீட்டில் நாமே செய்யும் பொழுது அதைவிட மன நிறைவு வேறு ஏதாவது இருக்குமா? அப்படி நாம் செய்யும் பால்கோவா கடைகளில் கிடைப்பதை விட மிகவும் சுவையாகவும் அழகாகவும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா? அதைத்தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • நெய் – ஒரு ஸ்பூன்
  • பால் – ஒரு லிட்டர்
  • பால் பவுடர் – 2 ஸ்பூன்
  • சர்க்கரை – 1/2 கப்பு
  • ரோஸ் மில்க் சிரப் – 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். கடாய் நன்றாக சூடானதும் அதில் நெய்யை சேர்க்க வேண்டும். நெய் உருகியதும் அதில் பாலை ஊற்ற வேண்டும். பால் பொங்கி கொதிக்க ஆரம்பித்த பிறகு அதில் பால் பவுடரை சேர்க்க வேண்டும். கட்டி விழுகாத அளவிற்கு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இதை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அது கெட்டியான பதத்தை அடைந்த பிறகு அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு அதில் ரோஸ் மில்க் சிரப்பை சேர்க்க வேண்டும். பிறகு இவை அனைத்தையும் நன்றாக கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு திரண்டு வந்த பிறகு அதை ஒரு பாக்சில் வைத்து ஆறவிட வேண்டும்.

- Advertisement -

ஆரிய பிறகு அந்த பாக்ஸில் இருந்து வெளியே எடுத்து நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் நறுக்கி பரிமாறலாம். மிகவும் எளிமையாக அதே சமயம் சுவையாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கக்கூடிய ரோஸ் மில்க் பால்கோவா தயாராகிவிட்டது. விருப்பப்படுபவர்கள் இதில் ஏலக்காய், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வாழைத்தண்டு கட்லெட் செய்யும் முறை

மிகவும் எளிமையான முறையில் அதே சமயம் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய இந்த ரோஸ் மில்க் பால்கோவாவை நீங்களும் வீட்டில் செய்து அனைவரின் பாராட்டையும் பெறலாம்.

- Advertisement -