உங்க வீட்டு ரோஜா செடியை, இப்படி மட்டும் வெட்டி பாருங்க! நீங்களே, நம்ப முடியாத அளவுக்கு பூ பூக்கும்.

rose
- Advertisement -

சிலபேர் வீட்ல வெச்சிருக்க ரோஜா செடி, ரொம்ப சின்ன செடியாய் இருக்கும். ஆனால், அதில் பூக்கள் நிறைய பூத்திருக்கும். சில பேர் வீட்டில், ரோஜா செடி ரொம்ப பெருசா, செழிப்பாக வளரும். ஆனால், மொட்டுக்கள் மட்டும் வைக்கவே வைக்காது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? உங்க வீட்ல இருக்க ரோஜா செடிக்கு இந்த பிரச்சனை இருந்தால், அதற்கு சரியான ஒரு தீர்வு இருக்கு. அதை பற்றிதுன் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

rose

சில ரோஜா செடிகளில், ஏழு இலைகளை கொண்ட கிளைகளில் கட்டாயம் பூ பூக்காது. உங்க வீட்டு ரோஜா செடியில் ஏழு இலைகள் கொண்ட, கிளைகள் வளரும் பட்சத்தில், அதன் கீழ்ப் பகுதியிலேயே வெட்டிவிட வேண்டும். (அதாவது மேற்கு பக்கத்தில் இருந்து, பிள்ளைகள் வளர ஆரம்பிக்கும் அல்லவா அந்த இடத்திலேயே வெட்டி விடலாம்.) ரோஜா செடியை வெட்ட வேண்டுமா என்று கவலைப்படாதீர்கள். நீங்கள் வெட்டிய கிளைக்கு பக்கத்திலேயே, மற்றொரு கிளை துளிர்விட ஆரம்பிக்கும். அது கட்டாயம் 5 இலைகளைக் கொண்ட கிளையாக, வளர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

சில செடிகளில் 7 இலை கொண்ட கிளைகளிலும், நிறைய பூ பூக்கும். இயற்கையாகவே அந்த செடியானது ஏழு இலை கொண்ட கிளைகளில், பூ பூக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். சில பட்டன் ரோஸ் வகை ரோஜா செடிகள் ஏழு இலைகளில் பூக்கக் கூடியது. அந்தச் செடியை நாம் எதுவும் செய்யக் கூடாது. பெரும்பாலான செடிகளில், பார்த்தோமேயானால் ஐந்து இலைகள் கொண்ட கிளைகளில் தான், நிறைய பூ பூக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உங்கள் வீட்டில் இருக்கின்ற ரோஜா செடியில் இதை நன்றாக கவனித்துப் பாருங்கள். 7 இலைகளை கொண்ட ரோஜா செடி கிளைகளில், மொட்டுக்கள் விடவே விடாது.

rose-1

அடுத்ததாக, ரோஜா பூ ஒருமுறை, ஒரு கிளையில் பூக்கும், அந்த ரோஜா பூவுக்கு கீழ் பக்கமாக, உள்ள இலைகள் லேசாக பழுப்பு நிறமாக வாட ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் அந்த பழுப்பு நிற இலையோடு சேர்த்து அந்த ரோஜா பூவை வெட்டிவிட வேண்டும். இப்படி செய்தோமேயானால், அந்த இடத்தில்  மீண்டும் நிறைய மொட்டுகள் வைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

நீங்கள், உங்களுடைய செடிகளின் கிளைகளை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். அது நீண்டு வளர்கின்றதா அல்லது அந்த கிளைகளிலிருந்து மற்றொரு கிளை துளிர்விடுகின்றதா என்று, பார்ப்பது மிகவும் அவசியம். அதாவது ஒரே கிளையில், ரோஜாசெடி வளரக்கூடாது. அந்த ஒரு கிளையிலிருந்து, மற்றொரு துளிர் விட வேண்டும். இதற்கு நீங்கள் அந்த கிளைகளை வெட்டி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

rose-cutting

வெட்டி விடும்போதும் கத்திரிக்கோலை நேராக வைத்து ரோஜா செடி தண்டுகளை வெட்டி கூட விடக்கூடாது. கத்திரிக்கோலை, சாய்ந்தபடி வைத்துதான் வெட்ட வேண்டும். கத்திரிக்கோலானது, வானத்தைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். அல்லது பூமியைப் பார்த்து இருக்க வேண்டும்.

- Advertisement -

எடுத்துக்காட்டாக, சீவாத பென்சிலில் கத்தி வைத்து, ஒரே ஒரு முறை சீவினால் அந்த பென்சிலின் ஒரு பக்கம் மட்டும் வெட்டுப்படும் அல்லவா? அதுபோன்றுதான். அந்த ரோஜா செடியின் தண்டு பக்கத்தில் வெட்டு சாய்ந்த நிலையில் விழவேண்டும்.

இப்படி உங்களது கிளைகளை வெட்டிவிட, உங்களது செடி பல கிளைகளில் வளர ஆரம்பிக்கும். அப்போது அந்தக் கிளை முழுவதும் அதிக மொட்டுக்கள் வைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த முறையை உங்கள் வீட்டில் இருக்கும் ஒரே ஒரு செடிக்கு மட்டும் சோதனை செய்து பாருங்கள். பின்பு மற்ற செடிகளுக்கு எல்லாம் செய்து கொள்ளலாம். உங்களுடைய செடி வளர்வதில், வித்தியாசம் 10 நாட்களில் தெரிந்து விடும்.

இதையும் படிக்கலாமே
யாரையும் நம்பி ஏமாறாமல் இருக்கணும்னா, இந்த 4 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Roja chedi naduvathu eppadi. Roja chedi tips Tamil. roja chedi valarpu. Roja uses Tamil

- Advertisement -