வெயில் காலத்திலும் கூட, உங்க வீட்டு ரோஜா செடி கொத்துக் கொத்தா பெரியபெரிய பூக்களை பூகணும்னா நாளையிலிருந்து மறக்காமல் 1 கப் இந்தத் தண்ணீர் ஊற்ற மறந்திடாதீங்க!

rose

இன்னும் சில நாட்களில் வெயில் காலம் தொடங்கப் போகின்றது. அடிக்கும் வெயிலுக்கு மனிதர்களிலேயே நீர்ச்சத்து இல்லாமல் நிச்சயமாக வாழ முடியாது. இதே போல் தான் நம் வீட்டில் இருக்கும் செடி கொடிகளையும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. வரக்கூடிய வெயில் காலத்திலிருந்து, உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடிகள் மற்றும் பூச்செடிகள், மற்ற காய்கறி செடிகளை எப்படி பாதுகாக்க போகின்றோம் என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

white-rose

நம்முடைய உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருளைத் தான், செடிகளுக்கும் கொடுக்கப் போகின்றோம். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருள் என்றால் அந்த வரிசையில் பழைய சாதம் முதலிடம் பிடிக்கும். இன்று நாம் இதை பெரும்பாலும் சாப்பிடுவது கிடையாது. ஆனால், வெயில் காலங்களில் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க இதை விட சிறந்த உணவு வேறு கிடையாது.

ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உங்கள் வீட்டில் மீதமாக கூடிய சாப்பாடை தண்ணீர் ஊற்றி, சேகரித்து வைத்து வாருங்கள். இந்த சாப்பாடு 10 நாட்கள் அப்படியே புளிக்க வேண்டும். 10 நாட்கள் தண்ணீரில் நன்றாக ஊறிய சாதத்தை, நன்றாக உங்கள் கையைக் கொண்டே நசுக்கி பிசைய வேண்டும். அப்படி ஒன்றும் வாடை வீசாது. புளித்த வாடை தான் வீசும்.

rice

செடிகளுக்கு வெயில் காலங்களில் தேவைப்படக் கூடிய அனைத்து சத்துக்களும், 10 நாட்கள் தண்ணீரில் ஊறிய பழைய சாதத்தில் இருக்கும். இதில் செடிகளுக்கும் தேவையான புரதச்சத்து, நுண்ணுயிர் சத்து, பொட்டாசியம் சத்து, அனைத்தும் கிடைக்கும். 1 லிட்டர் அளவு பழைய சாதத்தை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், அதை நன்றாக கையில் கரைத்துக் கொண்டு, பத்து மடங்கு தண்ணீரில், இதை கலந்து அதன் பின்பு உங்களது செடிகளுக்கு ஊற்ற வேண்டும். அவ்வளவு தான்.

- Advertisement -

ஒரு மடங்கு பழைய சாதத்திற்கு, கட்டாயம் 10 மடங்கு தண்ணீர் கலக்கப்படுகிறது. மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் கூட போதும். இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை செடிகளின் வேர்ப் பகுதி, இலை பகுதி எல்லா இடங்களிலும் ஊற்றி விடலாம். வெயில் காலங்களில் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். செடிகள் வாடாது செடிகளில் உள்ள இலைகள் கொட்டாது.

rose-plant-spray

தேவைப்பட்டால் இந்த தண்ணீரில் நன்றாக புளித்த தயிரை 1/2 கப் அளவு சேர்த்தும் செடிகளுக்கு ஊற்றலாம். அதிகப்படியான வெயில் இருக்கும் சூழ்நிலையில், 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த தண்ணீரை கொடுத்தாலும் தவறு கிடையாது. உங்கள் வீட்டு செடிகளை பாதுகாக்க நீங்களும் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா நல்ல ரிசல்ட் கிடைக்கும். வெயில் காலங்களில் கூட உங்களுடைய செடி ஃபிரஷா, பெரிய பெரிய பூக்கள் பூப்பதை, காய்கறிகள் செடிகளாக இருந்தால், காய்கறிகள் செழிப்பாக வளர்வதை, நீங்க உணருவீர்கள். ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
12 ராசிக்காரர்களும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கப் பெறக்கூடிய அதிர்ஷ்ட யோகங்கள் என்ன தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.