12 ராசிக்காரர்களும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கப் பெறக்கூடிய அதிர்ஷ்ட யோகங்கள் என்ன தெரியுமா?

thiyanam-vinayagar

பொதுவாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுதுவது என்பது வாழ்க்கையை வென்று விடுவதற்கு சமமாக கருதப்படுகிறது. எவரொருவர் பிரம்ம முகூர்த்தத்தில் தினமும் எழுந்து தன்னுடைய அன்றாட வேலைகளை செய்கிறார்களோ! அவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. அந்த காலத்தில் ஆரோக்கியமும், மனநிம்மதியும் இருந்ததற்கு காரணம் அவர்கள் அதிகாலையில் எழுவது ஆகும். இன்று ஆண், பெண் வித்தியாசமில்லாமல் எல்லோருமே நேரம் கடந்து தான் எழுந்திருக்கிறோம். இதனால் நம் வீட்டிலும், நம்மிடமும் தரித்திரம் தாண்டவமாடுகிறது.

brahma-muhurtham

வாழ்க்கையில் மனிதன் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற உணர்வுடன் இருக்க வேண்டும். ஏதோ பிறந்து விட்டோம் அதனால் வாழ்கிறோம் என்று நினைத்தால் அவர்களால் எதையுமே சாதிக்க முடியாமல் போய்விடும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது தேவாதி தேவர்களும், அத்தனை தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்க செய்யும்.

உண்மையிலேயே இந்த பிரபஞ்சத்தில் தூய்மையான காற்றும், இறையருளும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நிறைந்து இருக்கும். அந்த நேரத்தில் எழுந்து வீட்டை விட்டு வெளியில் வந்து நின்று பார்த்தால் தெரியும். அவ்வளவு ஒரு நல்ல நேர்மறை ஆற்றல் நமக்குள் தானாகவே பிறக்கும். இன்று நிச்சயமாக எதையோ சாதிக்க போகிறோம் என்ற உணர்வு வரும். நல்ல எண்ணங்களும், இறை நம்பிக்கையும் அதிகமாகும்.

astrology

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழும் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன மாதிரியான யோகங்கள் கிடைக்கும் தெரியுமா? மேஷம், சிம்மம், தனுசு ராசியில் பிறந்தவர்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து விளக்கேற்றினால் உங்களுடைய குலதெய்வ ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடனேயே இருக்கும். அறிவாற்றல் மிகுந்த குழந்தைகளும், திடீர் அதிர்ஷ்ட யோகங்களும் வாய்க்கும்.

- Advertisement -

ரிஷபம், கன்னி, மகரம் ராசியில் பிறந்தவர்ககளுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, வாசல் வாங்கும் ஆசை உங்களுக்கு இருந்தால் இனி பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழ பழகுங்கள். எப்படிப்பட்ட மன அழுத்தமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் எழுவதால் உடனே தீர்ந்துவிடும்.

மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே இருக்காது. மனதில் ஒருவிதமான அமைதி குடிகொள்ளும். எப்படிப்பட்ட கோபக்காரர்களும் சாந்தமாக மாறிவிடுவார்கள். கணவன்-மனைவிக்குள் பிரச்சினைகள் தீரும். பிரிவு வரை சென்றவர்கள் மீண்டும் ஒன்று இணைவார்கள். நினைத்தது நடக்கும், தொட்டதெல்லாம் துலங்கும்.

astro

கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து விளக்கேற்றி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்கிற தெளிவான முடிவு உங்களுக்கு கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதிகாலையில் எழுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

vinayagar

முதல் ஆறு லக்னகாரர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து விநாயகருக்கு விளக்கேற்றி, பசும்பால் நைவேத்தியம் வைத்து வழிபட்டால் எல்லா தடைகளும் நீங்கி செல்வ வளம் பெருகும். அடுத்த ஆறு லக்னகாரர்கள் விநாயகருக்கு இதே போல் விளக்கை ஏற்றி தேங்காய் வைத்து வழிபட்டால் இது போல் அனைத்து தடைகளும் தகர்ந்து, செல்வ வளம் கொழிக்கும் என்பது ஐதீகம். அந்த காலத்து தமிழர்களும், ரிஷி, முனிகளும் இந்த நேரத்தில் எழுந்து நல்ல அறிவாற்றல் பெற்றுள்ளனர்.

இதையும் படிக்கலாமே
இந்த 2 பொருட்களை சேர்த்து வீட்டில் தீபம் ஏற்றினால் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். தோல்வியே துவண்டு போகும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.