முடி வளர்ச்சியை தூண்ட இந்த 1 இலை போதும். தூங்கும்போது கூட முடி வளர்ந்து கொண்டே இருக்கும்.

hair18
- Advertisement -

முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய ஒரு தாவரம்தான் ரோஸ் மேரி. இந்த ரோஸ் மேரியை முடி வளர தேவையான எண்ணெயோடு ஷாம்புவோடு அதிக அளவில் சேர்க்கிறார்கள். ரோஸ்மேரியை வைத்து நம் வீட்டிலேயே முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய இரண்டு ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ரோஸ் மேரி ஹேர் ஸ்பிரே, ரோஸ்மேரி தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி தெரிந்து கொள்வோமா. இதோடு இந்த பதிவின் இறுதியில் இதே ரோஸ்மேரி ஆயிலை வைத்து புருவத்தினை எப்படி அடர்த்தியாக வளர்ப்பது என்பதை பற்றிய குறிப்பையும் பார்க்க போகின்றோம். பயனுள்ள எல்லா தகவல்களையும் படித்து பலன் பெறவும்.

ரோஸ்மேரி ஹேர் ஸ்பிரே:
இதை தயார் செய்ய நமக்கு ரோஸ்மேரி இலை கட்டாயம் தேவை. இதை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொண்டாலும் சரி. அப்படி இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொண்டாலும் சரி. இந்த ரோஸ்மேரி இலைகள் நமக்கு கட்டாயம் தேவைப்படும். வாங்கிய ரோஸ்மேரி இலைகளை தண்ணீரில் கழுவி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். 1 கைப்பிடி ரோஸ்மேரி இலைகள் போதும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி வெட்டி வைத்திருக்கும் ரோஸ்மேரி இலைகளை அந்த தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். 10 நிமிடம் தண்ணீர் கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, தண்ணீர் ஆறிய பின்பு இதை வடிகட்ட வேண்டும். நமக்கு ரோஸ்மேரி வாட்டர் கிடைத்திருக்கும் அல்லவா. இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 7 நாட்கள் கெட்டுப் போகாது.

இந்த தண்ணீரை தலைக்கு ஸ்ப்ரே கொள்ள வேண்டும். தலைக்கு குளித்து வந்த பிறகு இந்த ஸ்பிரேவை தலையில் அடைத்துக் கொண்டாலும் சரி, அல்லது இரவு தூங்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு இந்த ஸ்பிரேவை தலையில் அடித்துக் கொண்டாலும் சரி, உங்களுடைய முடி வளர்ச்சி பல மடங்காக அதிகரிக்கும். முடி உதிர்வு குறையும். இந்த ஸ்ப்ரேவை மயிர் கால்களில் படும்படி பயன்படுத்தலாம். முடியின் நுனி வரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். வாரத்தில் மூன்று நாட்கள் இதை பயன்படுத்துங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில்.

- Advertisement -

ரோஸ் மேரி ஆயில்:
இதற்கும் பொடியாக நறுக்கிய 1 கைப்பிடி அளவு ரோஸ்மேரி இலைகள் நமக்கு தேவைப்படும். முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். அதன் மேலே மற்றொரு பாத்திரத்தை வைத்து அதன் உள்ளே 100ml தேங்காய் எண்ணெய் ஊற்றி, தயாராக வெட்டி வைத்திருக்கும் ரோஸ்மரி இலைகளை தேங்காய் எண்ணெயில் போட்டு டபுள் பாய்லிங் மெத்தடில் இதை 20 நிமிடங்கள் சூடு செய்ய வேண்டும். மரச்செக்கு தேங்காய் எண்ணெயை குறிப்புக்கு பயன்படுத்துங்கள்.

அடுப்பில் நேராக வைத்து எண்ணெயை காய்ச்சக் கூடாது. சுடுதண்ணீரின் மேலே வைத்து மிதமான தீயில் தான் டபுள் பாய்லிங் மெத்தடில் தேங்காய் எண்ணெயை சூடு செய்ய வேண்டும். ரோஸ்மெரி இலையில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் எண்ணெயில் இறங்கிவிடும். எண்ணெய் பச்சை நிறத்திற்கு மாறும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, இந்த எண்ணெயை நன்றாக ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த எண்ணெயை தலையில் வைத்து நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் ஊற வைத்து அதன் பின்பு தலைக்கு குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி செய்யலாம்.

இந்த ரோஸ்மேரி தேங்காய் எண்ணெயை வைத்து புருவங்களை அடர்த்தியாக வளர செய்வது எப்படி. ஒரு சிறிய பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ்மேரி தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். இதோடு 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை ஊற்றி நன்றாக கலந்தால் புருவத்தினை அடர்த்தியாக வளர்ப்பதற்கு தேவையான எண்ணெய் தயார். இந்த எண்ணெயை இரண்டு சொட்டு தொட்டு இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய புருவங்களில் படும்படி லேசாக மசாஜ் செய்து அப்படியே விட்டு விடுங்கள். தினமும் இந்த எண்ணெயை புருவத்தின் மேல் வைக்கலாம். ஒரு சில நாட்களில் புருவமும் அடர்த்தியாக வளரத் தொடங்கும். உங்களுக்கு இந்த குறிப்புகள் அனைத்தும் பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய அழகு மேலும் அழகாக இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -