முடிந்தால் எங்களது மண்ணில் இவரை சதமடிக்க சொல்லுங்கள் – டிம் சவுதி சவால்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் மே மாதம் போட்டிகள் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றே கூறவேண்டும். அணி கோலி தலைமையிலான இந்திய அணி இப்போது சுப்ரீம் பார்மில் உள்ளது.

msd

இந்நிலையில், இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க நியூசிலாந்து சென்றடைந்துள்ளது. இரண்டு அணிவீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . வரும் 23ஆம் தேதி போட்டிகள் துவங்கி பிப்ரவரி 3ஆம் தேதி முடிகிறது. மொத்தம் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது இந்திய அணி

தற்போது நியூசிலாந்து அணியை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி இந்த தொடர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி தற்போது வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

koli

வரும் தொடரில் முடிந்தால் எங்களது மண்ணில் அவரை சதமடிக்க சொல்லுங்கள் என்று சவுதி கூறியுள்ளார். நியூசிலாந்த்து மண்ணில் எந்த இந்திய கேப்டனும் இதுவரை சதமடித்தது இல்லை . எனவே, பேட்ஸ்மேனாக கோலி நியூசிலாந்து மண்ணில் சதமடித்து இருந்தாலும் கேப்டனாக இந்த தொடரில் அவர் சதமடித்து அந்த சவாலை முறியடிப்பார் என்று நம்பலாம்.

இதையும் படிக்கலாமே :

முழுத்தகுதியுடன் இருக்கும்போதே அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருகிறதா ? – பி.சி.சி.ஐ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்