வீடு மனை வாங்கும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா ? பார்ப்போம் வாருங்கள்.

astrology
- Advertisement -

இந்த உலகில் தோன்றிய பெரும்பாலான உயிர்களுக்கு இந்த நிலமான பூமி தான் இரண்டாவது தாய். “காணி நிலம் போதும்” என்று பாடினார் மஹாகவி பாரதியார். ஆனால் நம் நாட்டில் பலருக்கும் அந்த காணி நிலம் கூட சொந்தமாக இல்லை. ஜோதிட சாத்திரத்தில் நிலத்திற்கு அதிபதியாக செவ்வாய் கிரகம் கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு அவனது ஜாதகத்தில் நிலம் சம்பந்தமான சொத்து அமைய செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படி செவ்வாய் பகவானால் ஏற்படும் ரூச்சக யோகத்தைப் பற்றி இங்கு காண்போம்.

astrology

ஒரு மனிதனின் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் “ஆட்சியோ” அல்லது “உச்சமோ” பெற்றிருந்தால் அது “ரூச்சக யோகத்தை” ஏற்படுத்திக்கிறது. உதாரணமாக ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் அவரது “ஆட்சி” வீடான “மேஷம்”, “விருச்சிகம்” இதில் ஏதேனும் ஒன்றில் இருந்தாலும் அல்லது செவ்வாய் பகவானுக்கு உச்ச வீடான “மகர” ராசியில் செவ்வாய் பகவான் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு “ரூச்சக யோகம்” ஏற்படுகிறது.

- Advertisement -

உதாரணம்:

horoscope

horoscope

horoscope

மேலே உள்ள ஜாதக கட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் அமைந்திருந்தால் உங்களுக்கு ரூச்சக யோகம் இருக்கிறது என்பதை அறியலாம்.

- Advertisement -

இந்த யோகத்தினால் இந்த ஜாதகர்கள் இப்பூமியில் அரசன் அல்லது அரசனுக்கு நிகரான வாழ்க்கையை வாழ்வார்கள். நல்ல வலிமையான உடல் கொண்டவர்களாக இருப்பார்கள். மல்யுத்தம், வீரக்கலைகளில் தேர்ச்சியுற்றவர்களாக இருப்பார்கள். அதி வீரமும், தைரிய குணமும் இருப்பதால் உயிரை பணயம் வைத்து ஈடுபடும் சாகச விளையாட்டுகள், காவல் துறை, ராணுவம், போன்றவற்றில் துறைகளில் புகழ் பெறும் காரியங்களை செய்வார்கள். ஒரு சிலர் ஆயுத வியாபாரத்தின் மூலம் மிகப் பெரும் செல்வந்தர்களாக ஆவார்கள். இதற்கு காரணம் “போர் கிரகமான” செவ்வாயின் அருள் இவர்களுக்கு இருப்பதால் தான்.

இதையும் படிக்கலாமே:
வாழ்கையை தலைகீழாக மாற்றும் ஜாதக கிரக நிலை பற்றி தெரியுமா ?

மேலும் இந்த யோகத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவான் “பூமிகாரகனாகவும்” இருப்பதால், இவர்களுக்கு ஏக்கர் கணக்கில் அல்லது ஹெக்டேர் கணக்கில் நிலம் சொந்தமாக இருக்கும். இவர்களின் நேரடி, மறைமுக எதிரிகளால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது, மாறாக அவர்கள் இவரை கண்டாலே அஞ்சி நடுங்குவர். அரசியலில் ஈடுபட்டாலும் உயர்ந்த பதவிகளை பெறுவார்கள். வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் சேர்க்கை ஏற்படும்.

- Advertisement -