ஜாதகத்தில் இந்த கிரக நிலை இருந்தால் வாழ்கை தலைகீழாக மாறும் தெரியுமா ?

astrology

“சகடம்” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் “சக்கரம்”. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவும் எவ்வகை வாகனத்திற்கும் மிக முக்கியமான ஒரு பாகம் சக்கரம். இவ்வட்டமான சக்கரம் கீழ்ப்பகுதி மேலும்,மேல்பகுதி கீழும் எப்போதும் போல் சுழல்வதைப் போன்றே, சிலரது வாழ்க்கையும் எவ்விதமான மாறுதல்கள் இன்றி சாதாரண நிலையில் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும். இப்படிப் பட்டவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தோமேயானால் இவர்களில் பெரும்பாலோர்க்கு “சகடை யோகம்” இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த சகடை யோகத்தை “யோகம்” என்று கூறுவதை விட “தோஷம்” என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.

astrology

ஜாதகத்தில் ஒருவருக்கு குரு பகவான் நின்ற ராசிக்கு 6,8,12 ராசிகள் அல்லது இடங்களில் சந்திர பகவான் இருந்தால் அவருக்கு “சகடை யோகம்” அல்லது “தோஷம்” இருக்கிறதென்று பொருள். இவ்விருகிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இந்த 6,8,12 ஆம் இடங்கலில் அக்கிரகங்களின் உச்ச ராசி அல்லது வீட்டிலிருந்தால் சகடை தோஷம் இல்லை எனக் கொள்ளலாம்.

உதாரணமாக உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் 1 ஆம் கட்டத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அங்கிருந்து 6 வது கட்டத்திலோ அல்லது 8 வது கட்டத்திலோ அல்லது 12 வது கட்டத்திலோ சந்திரன் இருந்தால் அதை சகடை யோகம் எனக் கூறலாம்.

sagadai

இந்த சகடை யோகம் கொண்ட ஜாதகரின் வாழ்க்கையை பார்த்தோமேயானால். அந்நபரின் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயங்கள் பெரும்பாலும் நடந்திருக்காது. அவர் ஒரு காரியத்தை தொடங்கினாரென்றால் பல போராட்டங்கள், தடைகளைக் கடந்த பின்பே அக்காரியம் நடக்கும். சிறந்த கல்வி கற்கா நிலை, படித்து முடித்தப் பின்பு படிப்பிற்கேற்ற சரியான வேலை வாய்ப்பில்லா நிலை, தாமதமான திருமணம், ஒரு சிலருக்கு திருமணமே ஆகாத நிலை, மிகுந்த செல்வமில்லாத ஏற்ற இறக்கமான பொருளாதார நிலை கொண்ட வாழ்க்கை இந்த சகடை தோஷத்தால் ஏற்படும் பொதுவான விளைவுகள்.

- Advertisement -

astrology

மேலும் இவர்கள் ஒரு திருப்தியற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இது போன்ற ஒரு ஜாதக அமைப்பில் ஒருவர் பிறக்கக் காரணம் முற்பிறவியில் இவர்கள் பிறரை ஏமாற்றி பொருளீட்டியதாலும், தனக்கு கற்பிக்கும் குருவிற்கு குருதுரோகம் புரிந்ததாலும் தான் என அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இது தான் நம் வாழ்க்கை என்று நொந்து கொண்டு இதே நிலையில் இவர்கள் வாழ்க்கை தொடராமல், இவர்களும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ சில வழிமுறைகள் உண்டு.

astrology

பரிகாரம்:

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் கோவிலுக்குச் சென்று சந்திர மற்றும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

கோவில் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தானங்களிலும், சேவைகளிலும் ஈடுபடலாம்.

சித்தர்களின் ஜீவ சமாதி பீடங்களுக்கு பவுர்ணமி அன்று சென்று வழிபடுவதும் இச் சகடை தோஷத்தைப் போக்கும்.

இதைச் செய்வதால் உடனடிப் பலன் ஏற்படும் என்று எதிர்பார்க்காமல். பலன்கள் கிட்டும் வரை இதை திட நம்பிக்கையோடு தொடர்ந்து செய்வது அவசியமாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் கஜகேசரி யோகம் இருக்கிறதா என்பதை எப்படி அறிவது தெரியுமா ?

English Overview:
Here we explained about sakadai Yoga in Tamil astrology. This yoga is also called as Dhosam. We have given some pariharam to rectify Sakadai dhosam.