ருத்ராட்சம் யாரெல்லாம் அணியலாம், அணிவதால் என்ன நன்மை, எப்போதெல்லாம் அணியக்கூடாது. பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

ruthratcham
- Advertisement -

ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது சிவ பெருமானே. இந்த ருத்ராட்சத்தை பலரும் அணிய விரும்பினால் கூட அணிந்தால் நல்லதா கெட்டதா? அணிந்த பின் ஏதேனும் தவறு நடந்து விட்டால் தெய்வ குற்றம் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் அணிவதில்லை. இன்னும் சொல்ல போனால் சிவனையே நினைத்து பூஜித்து கொண்டு இருப்பவர்கள் கூட இதை அணிய சிறிது தயங்க தான் செய்கிறார்கள். மேலும் இதை பெண்கள் அணியவே கூடாது என்ற கருத்தும் நம்மில் பலருக்கு உள்ளது. அப்படியானால் இந்த ருத்ராட்சத்தை யார் தான் அணிய வேண்டும், எப்படி அணிய வேண்டும், அப்படி அணிந்துக் கொண்டால் என்னென்ன முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இது போன்ற கேள்விகளுக்கான விடை தான் இந்த பதிவு.

அதற்கு முன் ருத்ராட்சம் எப்படி தோன்றியது என்பதனை குறித்து நாம் சற்று சுருக்கமாக தெரிந்துக்கொள்வோம். திரிபுராசுரன் என்ற அரக்கன் பிரம்மனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களை பெற்று சகல வல்லமையுடைய மாபெரும் அரக்கனாக மாறி தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைபடுத்தியதால், அவனின் கொடுமையை தாங்க முடியாமல் அவர்கள் சிவனிடம் முறையிட்டதாகவும், அவர்களை காக்க ஈசன் பல ஆயிரம் ஆண்டுகளாக தவம் புரிந்து அந்த அரக்கனை அழிக்க அகோரம் எனும் அயுதத்தை உருவாக்கி அழித்தாகவும், அப்படி கண்விழித்து தவம் புரிந்த ஈசன் தவம் முடிந்து கண் மூடிய தருணத்தில் அவரின் மூன்றாவது கண்ணாண நெற்றிக்கண்ணில் இருந்து விழுந்த நீர்த்துளி தான் ருத்ராட்ச மரம் எனவும் அம்மரத்தின் பழம் தான் இந்த ருத்ராட்சம் என்றும் நம் புராணங்கள் கூறுகிறது. இதனால் தான் இந்த ருத்ராட்சம் அணிந்தவர்களை ஈசன் தன் கண் போல காப்பார் ஏனவும் கூறுவார்கள்.

- Advertisement -

ருத்ராட்சம் அனைவரும் அணிய கூடிய ஒன்று தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அணியலாம். வயது வந்த பெண்கள் அணியலாமா என்றால் நிச்சயமாக அணியலாம். ஏனெனில் பெண்களின் பெருந்தெய்வமான ஆதிபராசக்தியே ருத்ராட்சம் அணிந்திருந்தாக அருணாசல புராணம் விவரிப்பதாகவும், அதுமட்டுமின்றி சிவ புராணத்திலும் பெண்கள் கட்டாயமாக ருத்ராட்சம் அணியலாம் என்று கூறியிருப்பதாகவும் தகவல்கள் உள்ளது. அதுமட்டுமல்ல, ருத்ராட்சம் அணிந்து குளிக்கும் போது அது நாம் கங்கையில் குளிப்பதற்கு சமம் என்றும் கூறுகின்றனர். கங்கையில் நீராடினால் பாவம் போகும் என்பது ஐதீகம். அப்படி பட்ட புனிதம் இந்த ருத்ராட்சம் அணிந்தவர்களுக்கு கிடைக்கும் என்றால் அதுவே பெரும் பேறு தான்.

இதை அணிந்தவர்களுக்கு மாரடைப்பு, இரத்தகொதிப்பு, சர்க்கரை, போன்ற வியாதிகள் வருவதும் குறைவு. ஏனெனில் இத்தகைய வியாதிகள் எல்லாம் வர முக்கிய காரணமே மன உளைச்சல் தான். இதை அணிந்தவர்களுக்கு மனதில் எப்போதும் ஒரு விதமான அமைதி இருக்கும். எளிதில் கோவப்பட மாட்டார்கள், எப்போதும் நேர்மறை சிந்தனையுடன் செயலாற்றுவார்கள்.

- Advertisement -

இந்த ருத்ராட்சம் அணிந்து கொண்டு இறப்பு நிகழந்த வீடு, பெண் குழந்தைகள் பூப்பெய்திய வீடு, ஏன் இதை அணிந்தவர்கள் இல்லற வாழ்வில் கூட ஈடு படலாம் தவறேதும் இல்லை. ஏனெனில் இவை அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்ட இயற்கை சார்ந்த ஒரு நிகழ்வு தான். இதில் தீட்டு என்ற ஒன்று இல்லை. இதையெல்லாம் புரியாமல் ஒதுக்குவது தான் தவறு. ஆனால் இதை அணிந்தவர்கள் அசைவம் உண்பதை தவிர்த்தால் நல்லது. அதுவும் கட்டாயம் இல்லை அசைவம் உண்ணும் நேரங்களில் ருத்ராட்சத்தை கழற்றி விட வேண்டும். இதை அணிந்துக் கொண்டு இருக்கும் போது தெரியாமல் அசைவம் சாப்பிட்டு விட்டால் ருத்ராட்சத்தை கழற்றி பூஜை அறையில் வைத்து பாலில் நனைத்து பின் நீரில் அலசி அணிந்துக் கொள்ளலாம்.

ருத்ராட்சம் அணிந்து கொண்டு தியானம் செய்யும் போது ஒரு முறை கூறும் மந்திரமானது ஒரு கோடி முறை மந்திரத்தை உச்சரித்த பலன் கிடைக்கும். இந்த ருத்ராட்சமத்தை தானமாக அளித்தல் என்பது அளிப்பவருக்கு மட்டுமல்ல அவரின் அடுத்த தலைமுறைக்கே இதற்கான புண்ணிய பலன்கள் கிட்டும்.

- Advertisement -