உங்களுக்கு பண முடை நீங்க, தொழில் வியாபாரங்கள் சிறக்க இதை செய்யுங்கள்

sivan

எல்லாக்காலத்திலும் தீமையே உலகில் அதிகம் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. நன்மையான விடயங்களுக்கு பலம் குறைவு என்றாலும் தீமையை எந்த வகையிலாவது அது போக்கி விடுகிறது. நமது முன்னோர்கள் நம்மை அண்டியிருக்கும் தீமைகள் நீங்க பல வழிமுறைகளை கையாண்டனர். அதில் ஒன்று தான் ஹோமம் சடங்கு. இதில் பல வகைகள் உள்ளன. இங்கு ருத்ரம் ஹோமம் குறித்தும் அதை செய்வதால் நமக்கு ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

siva

ருத்ரம் என்பது தீயவற்றை அழிப்பதற்கு சிவபெருமான் எடுத்த பல வடிவங்களில் ஒன்றாகும். ருத்ரம் ஹோமம் செய்வதற்கு ஹோம பூஜை மற்றும் சடங்குகளை செய்வதில் நல்ல அனுபவம் பெற்ற வேதியரிடம் நல்ல நாள், நட்சத்திரம் நேரம் போன்றவற்றை குறித்து கொள்ள வேண்டும். இந்த ருத்ர ஹோமத்தை உங்கள் வீட்டிலோ அல்லது சிவன் கோயில்களிலோ செய்வது சிறந்தது. சிவாலயங்களில் செய்யப்படும் ருத்ர ஹோமத்திற்கு ஆற்றல் அதிகம் உண்டு.

வீட்டில் இந்த ருத்ர ஹோமம் பூஜை செய்வதற்கு முன் தினமே வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து விட வேண்டும். ஹோமம் பூஜை செய்வதற்கு முன்பாக வேதியர்கள் கூறிய பொருட்களை முன்பே தயாராக வைத்திருக்க வேண்டும். ஹோம பூஜைகள் பெரும்பாலும் பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள்ளாக தொடங்கி செய்யப்படுகிறது.

Homam

ஹோம குண்டம் அமைத்து, அதில் அக்னி எனும் நெருப்பை வளர்த்து அதில் இறைவனுக்கு நிவேதிக்கும் பூஜை பொருட்களை ஆவிற்பாகம் தந்து, சிவபெருமானுக்குரிய ருத்ர மந்திரங்கள் உச்சாடனம் செய்யப்பட்டு ருத்ர ஹோமம் செய்யப்படுகிறது. ஹோமம் முடிந்ததும் ஹோம சாம்பல் மற்றும் பிரசாதமாக தரப்படும் மஞ்சள் , குங்குமம், விபூதி மற்றும் பிற மங்கள பொருட்களை வீட்டின் பூஜையறையில் வைத்து குடும்பத்தில் உள்ளவர்கள் தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த ருத்ரம் ஹோமத்தினால் ஏற்படும் முதன்மையான பலன் உங்களின் பூர்வ ஜென்ம பாவங்களை பொசுக்கி, உங்களுக்கு நன்மையான பலன்கள் ஏற்படுவது தான். மேலும் உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ எதிர்பாரா மரணம் ஏற்படுதல், மரண பயம் உண்டாதல், எதிரிகள் தொல்லை போன்றவற்றை நீக்குகிறது.

இந்த ஹோமம் செய்யப்படும் போது சக்தி வாய்ந்த மந்திரங்கள் உச்சாடனம் செய்யப்படுவதால் உங்கள் வீட்டிலிருக்கும் எதிர்மறை சக்திகள் ஒழிகின்றன. உங்கள் மீதிருக்கும் துஷ்ட சக்திகளின் அதிர்வுகளை நீக்குகின்றன. வீட்டில் பணமுடை ஏற்படாமல் தடுத்து, திருடர்களால் பாதிப்பு உண்டாகாமல் தடுக்கிறது. உங்கள் வேலை, தொழில், வியாபாரங்களில் இருக்கும் பிரச்சனைகளை நீக்குகிறது.

இதையும் படிக்கலாமே:
குழந்தைகள் உடல்நலம் பெற

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rudra homam benefits in Tamil. It is also called as Homam pooja benefits in Tamil or Homangal in Tamil or Rudra mantra palangal in Tamil or Homa poojaigal in Tamil.