- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalருண விமோசன தேய்பிறை அஷ்டமி வழிபாடு

ருண விமோசன தேய்பிறை அஷ்டமி வழிபாடு

- Advertisement -

இந்த வருடத்தில் வந்திருக்கும் முதல் தேய்பிறை அஷ்டமி திதி, மிக மிக சிறப்பு வாய்ந்ததாக நமக்கு கிடைத்திருக்கிறது. செவ்வாய் கிழமை அன்று இந்த தேய்பிறை அஷ்டமி திதி வந்திருப்பதால், இதை ருண நீக்கும் தேய்பிறை அஷ்டமி திதி என்று சொல்லுவார்கள். ருணம் என்றால் கடனைக் குறிப்பது. இந்த கடன் பிரச்சினையிவிருந்து நீங்கள் நிரந்தரமாக விடுதலை பெற வேண்டும் என்றால் இன்றைய தினம் பூஜை அறையில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி வழிபாடு

இன்று 21-1-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி, இன்று மதியம் 12:45 மணிக்குத்தான் அஷ்டமி திதியானது பிறக்கிறது. இன்று மாலை 3:00 மணியிலிருந்து 4:30 மணி வரை ராகு கால நேரம். இந்த நேரத்தில் பைரவரை நினைத்து வழிபாடு செய்தால் உங்கள் வாழ்வில் இருக்கும் தீர்க்க முடியாத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். குறிப்பாக கடன் சுமை, நகையை அடமானத்தில் வைத்திருக்கிறீர்கள், சொத்து பத்திரத்தை அடமானத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று ஏதேனும் பிரச்சனை உங்கள் குடும்பத்தில் இருந்தால் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று இந்த வழிபாட்டை நீங்கள் செய்ய வேண்டும். வழிபாட்டை எப்படி செய்வது.

- Advertisement -

பூஜையறையில் இன்று ராகு கால நேரத்தில் சாதாரணமான ஒரு விளக்கு ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் என்ன விளக்கு ஏற்றுவீர்கள் காமாட்சி அம்மன் விளக்கு, அகல்விளக்கு, குத்து விளக்கு என்ன விளக்காக இருந்தாலும் பரவாயில்லை. அதை ஏற்றி வைத்துவிட்டு கொஞ்சம் சாம்பிராணி தூபம் ஏற்றி பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு எல்லாம் பூக்களை போட்டு, அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகரையும் மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளலாம். முடிந்தால் 2 வாழைப்பழம் நெய்வேதியம் வைத்து விடுங்கள். இல்லை என்றால் இரண்டு கற்கண்டு நெய்வேதியம் வைத்துவிட்டு, அந்த பூஜை அறையில் இறைவனைப் பார்த்து சிறிது நேரம் அமர்ந்து என்ன பிரச்சனை உங்களுக்கு இருக்கிறது. அதை இறைவனிடம் சொல்லி அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு காலபைரவரின் இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

- Advertisement -

கால பைரவர் மந்திரம்

ஓம் ஸ்ரீம் கால பைரவாய நமஹ !
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ !
ஓம் ஸ்ரீம் சுவர்ண பைரவாய நமஹ !

ராகு காலத்தில் துவங்கிய இந்த பூஜையை ராகு காலத்திலேயே நிறைவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் வெளியிடங்களில் இருக்கிறீர்கள், வேலை செய்பவர்களாக இருந்தால் கூட, இருந்த இடத்திலிருந்து இன்று ராகு கால நேரத்தில் இந்த மந்திரத்தை மட்டும் 3 முறை படித்தால் கூட கடன் சுமை தீரும். எவ்வளவு பெரிய பண பிரச்சனையாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனையிலிருந்து நிச்சயம் நீங்கள் வெளி வருவீர்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் தை மாத மைத்ரேய முகூர்த்தம்

முழு நம்பிக்கையோடு குல தெய்வத்தின் மீது பாரத்தை போட்டு கால பைரவரை நினைத்து, மேல் சொன்ன இந்த வழிபாட்டை இன்றைய தினம் செய்தால். நாம் செய்யும் பூஜைக்கு ஒரு பவர் இருக்கிறது என்றால், அந்த பூஜையை செய்யக்கூடிய நேரம் காலத்திற்கு இரண்டு மடங்கு பவர் இருக்கிறது. இன்றைய நாள் இந்த பூஜையை செய்தால், 12 மாதமும் கால பைரவரை அஷ்டமி திதியில் வழிபட்ட புண்ணியம் உங்களை வந்து சேரும் தவறவிடாதீர்கள். இன்று இந்த நாள், இந்த பதிவு உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதில் நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்