கண்ணிமைக்கும் நேரத்தில் கடன் பிரச்சினையை தீர்த்து வைப்பவர் இந்த விநாயகர். கைமேல் பலன் கிடைக்க, ஒரு வரி மந்திரத்தை, ஒரு நாள், விடாமல் உச்சரித்து பாருங்கள்!

runaganapathi

வாழ்க்கையில் மிச்சம் வைக்கக் கூடாத விஷயங்களில் ஒன்று கடன். அதாவது, நம்முடைய முன்னோர்கள் மிச்சம் வைக்க கூடாத விஷயங்களில் முதல் மூன்று இடங்களில் பகை, கடன், நெருப்பு இந்த மூன்றையும் சொல்லி வைத்துள்ளார்கள். நமக்கு இருக்கக்கூடிய பகையை எக்காரணத்தைக் கொண்டு மிச்சம் வைக்கக் கூடாது. அது தலைமுறை தலைமுறையாக வளரத் தொடங்கி நம் குடும்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இதேபோல் நெருப்பை அணைக்காமல் மிச்சம் வைத்து விட்டால், அந்த நெருப்பு பேராபத்தை ஏற்படுத்தும். இதேபோல்தான் கடனும். ஆயிரம் ரூபாய் கடன் தானே என்று நினைத்து அதை விட்டுவிட்டால், அந்த காசு வட்டிப் போட்டு, குட்டி போட்டு வட்டி போட்டு குட்டி போட்டு பெரிய அளவிலான நஷ்டத்தை நமக்கு ஏற்படுத்தி விடும்.

Kanipakam-Ganapathi

நீங்கள் நியாயமாக கடன் கொடுத்து, கடன் தொகையை திருப்பி பெற முடியாமல் அவதிப் பட்டுக் கொண்டிருந்தாலும், கடன் தொகையை வாங்கி விட்டு திருப்பித் தர முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களாக இருந்தாலும், இந்த மந்திரத்தைச் சொல்லி, இந்த விநாயகரை 48 நாட்கள் தொடர்ந்து வழிபாடு செய்து வந்தாலே உங்களுடைய கடன் பிரச்சனை கட்டாயம் தீரும் என்பதில் சந்தேகமே கிடையாது.

கடன் பிரச்சனை மட்டுமல்ல, எந்த ஒரு பிரச்சினைக்கும் உடனடித் தீர்வு தரும் சக்தி கொண்டவர் தான் அந்த விநாயகப் பெருமான். இந்த விநாயக பெருமானுக்கு பல முகம் உண்டு. அதில் ருணஹர கணபதியை பற்றிய மந்திரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எவரொருவர் தினம்தோறும் காலையில் எழுந்து, சுத்தமாக குளித்து முடித்துவிட்டு ருணஹர கணபதியை வழிபாடு செய்து வந்தாலும், அவர் நிச்சயம் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும்.

runaganapathi1

ருணஹர கணபதிக்கு கடன் பிரச்சனையை போக்ககி, பணக் கஷ்டத்தில் இருந்து உங்களை உடனடியாக விடுவிக்க கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது. உங்களுடைய கடன் பிரச்சனை தீர்த்து வைக்கப் போகும் ருணஹர கணபதி மந்திரம் உங்களுக்காக இதோ!

- Advertisement -

ருணஹர கணபதி மூலமந்திரம்:
ஓம் கணேச ருணம் சிந்தி
வரேண்யம் ஹும் நமஹ பட்

lakshmi-ganapathi

இந்த மந்திரத்தை 108 முறையிலிருந்து 1008 முறை உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை முறை உச்சரிக்கலாம். உங்களின் கடன் பிரச்சினையை கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இருந்தால் முழுமூச்சோடு ஒரு நாளைக்கு 1008 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பட்சத்தில், உங்களுடைய கடன் பிரச்சனை மிக மிக விரைவாக தீர்த்து வைக்கப்படும். ஒரே ஒரு முறையிலேயே முழுமையாக 1008 முறை உச்சரிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. காலையும் மாலையும் சேர்ந்தபடி 1008 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பதில் தவறொன்றும் கிடையாது.

kadan

உங்களுடைய கடன் பிரச்சினைக்கான தீர்வினை கண் இமைக்கும் நேரத்தில், கட்டாயம் அந்த கணபதி தீர்த்து வைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. கடன் பிரச்சனை என்று மட்டுமல்ல, உங்களுடைய மனதிற்கு கஷ்டம் தரும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தினம்தோறும் மனமுருகி விநாயகரிடம் வேண்டிக்கொண்டால், குறிப்பாக கற்பகவிநாயகரிடம், வேண்டுதலை வைத்தால் அந்த பிரச்சினைக்கான தீர்வு உடனடியாக கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பாவங்களைப் போக்க, தோஷங்கள் நீங்க, பிரச்சினைகள் தீர இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டாலே போதும். பல புண்ணிய நதிகளின், நீரில் உள்ள சக்தி, இந்த தீர்த்தத்திலும் உள்ளது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.