பாவங்களைப் போக்க, தோஷங்கள் நீங்க, பிரச்சினைகள் தீர இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டாலே போதும். பல புண்ணிய நதிகளின், நீரில் உள்ள சக்தி, இந்த தீர்த்தத்திலும் உள்ளது.

சாதாரண சூழ்நிலையில் வாழ்பவர்கள் தங்களுக்கு இருக்கக் கூடிய தோஷங்களையும், பிரச்சனைகளையும், பாவங்களையும் போக்குவதற்கு தூரத்தில் இருக்கும் புண்ணிய நதிகளில் சென்று நீராட முடியாத சூழ்நிலை இருக்கும். எல்லோராலும் செலவு செய்து கொண்டு காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு சென்று நம்முடைய பாவங்களை கழுவ முடியாது. இப்படிப்பட்ட சாதாரண மனிதர்களும் தங்களுக்கு இருக்கக் கூடிய கஷ்டங்களைப் போக்கி கொள்ள என்ன செய்யலாம், என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

komugam3

தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் இறைவன் என்பது நம் எல்லோரது நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் நம்பிக்கையோடு எவரொருவர் ஒரு கல்லை இறைவனாக நினைத்து வழிபாடு செய்தாலும், அந்தக் கல்லின் வடிவத்தில் இறைவனின் ஆசீர்வாதத்தை நாம் நிச்சயம் பெற முடியும். இதற்காக கோவிலுக்கு செல்லக்கூடாது. கோவிலில் உள்ள தெய்வங்களை வழிபட கூடாது, என்று சொல்ல வரவில்லை. நம்முடைய உண்மையான நம்பிக்கையே, இறையாற்றல் என்பதற்காக சொல்லப்படும் எடுத்துக்காட்டு தான் அது.

நம்முடைய வீட்டின் அருகில் இருக்கும் கோவில்களில் தினந்தோறும் இறைவனுக்கு அபிஷேகம் நடத்தப்படும். அந்த அபிஷேக தண்ணீர், சன்னிதானத்தை விட்டு வெளியில் வர ஒரு இடமும் இருக்கும். அபிஷேகத் தண்ணீர் வெளிவரும் நீரை கோமுக தீர்த்தம் என்று சொல்லுவார்கள். இந்த அபிஷேக தண்ணீரும் புண்ணிய தீர்த்தத்திற்கு சமமாகத்தான் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

komugam2

இந்தத் தீர்த்தம் பிரகாரத்திற்கு வெளி இடங்களில் வரும்போது, நாம் பிரகாரத்தை சுற்றி வரும்போது சமயத்தில், அந்த நீரை முடிந்தவரை நம்முடைய கால்களில் மிதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அறியாமல் செய்தால் தவறு கிடையாது. இருப்பினும் அந்த இடத்தில் அபிஷேகத் தண்ணீர் வெளிவருகிறது என்றால் நாம் அதை கவனித்து முடிந்தவரை காலின் மிதிக்க வேண்டாம்.

- Advertisement -

நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்குவதற்கு அந்த தண்ணீரை கையில் பிடித்து நம்முடைய தலையில் கொஞ்சம் தெளித்துக் கொண்டால் மிகவும் நல்லது. அந்தத் தண்ணீர் வெளிவரும் போது அதை ஒரு பாத்திரத்தில் பிடித்து கொண்டு நம்முடைய வீட்டிற்கு கொண்டு வந்து, வீடு முழுவதும் தெளிக்கலாம். வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்கும். தொழில் செய்யும் இடங்களில் இந்த தீர்த்தத்தை தெளித்தால், பிரச்சினைகள் நீங்கி அதிக லாபம் கிடைத்து நன்மை உண்டாகும்.

komugam2

இதோடு மட்டுமல்லாமல் இந்த தீர்த்தத்தை நம்முடைய வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜையும் செய்யலாம். 10 நாட்கள் வரை அந்த தீர்த்தம் கெட்டுப் போகாது. அந்த நீரை பூஜை அறையில் வைத்து தினந்தோறும் பூஜை செய்து தினம்தோறும் தலையில் தெளித்துக் கொண்டு, தினந்தோறும் வீட்டின் மூலை முடுக்குகளில் தொடர்ந்து 10 நாட்கள் வரை தெளித்து வந்தால், நமக்கும் நம்முடைய வீட்டிற்கு மிகவும் நல்லது. முடிந்தவரை அந்த தீர்த்தத்தை செம்புப் பாத்திரத்தில், வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால், கண்ணாடி பாத்திரத்தில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். எவர்சில்வர் பாத்திரத்தில் வைக்க கூடாது.

theertham

உங்களுடைய வீட்டில் தீராத சங்கடங்கள் இருக்கின்றது. உங்களுடைய குழந்தைகளுக்கு திருமணத்தடை, குழந்தை பேரு கிடைக்க வேண்டும், வீட்டில் சண்டை சச்சரவு தீர, தீராத நோய் நொடிகள் தீர, இவ்வாறாக பலவகைப்பட்ட குழப்பங்கள் உங்களுடைய குடும்பத்தில் நிலவி வரும் சமயத்தில், நீங்கள் பின்வரும் பரிகாரத்தை செய்யலாம். கோவில் தீர்த்தம் வெளிவருகின்றது அல்லவா? அந்த கோமுக தீர்த்தம் வெளிவரும் இடத்தில், பிரகாரத்தில் சில இடங்களில் பாசி பிடித்து அழுக்காக இருக்கும்.

gomuga-theertham

அந்த இடத்தை தேங்காய் நார் கொண்டு நன்றாக தேய்த்து சுத்தப்படுத்தி விடுவது நமக்கு பெரிய புண்ணியத்தை சேர்க்கும். நம் வீட்டில் இருக்கும் தீராத பிரச்சனை தீர்வதற்கு இதுவும் ஒரு சுலபமான பரிகாரமாக சொல்லப்படுவது. இதோடு மட்டுமல்லாமல் சில கோவில்களில் பிரகாரங்கள் தூய்மையற்ற நிலையில் இருக்கும். அதை கோவில் நிர்வாகத்தால் சரிசெய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்ட சமயத்தில், கோவில் நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்று, அந்த இடத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொடுக்கலாம். உங்களால் இயன்றவரை உதவிகளை செய்து வரலாம். கோவில்களுக்கு நாம் செய்யும் இந்த சின்ன சின்ன தொண்டுகள் நமக்கு இருக்கக்கூடிய பாவங்களை தோஷங்களை படிப்படியாக குறைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

இதையும் படிக்கலாமே
விநாயகரின் உள்ளங்கையில் இருக்கும் இந்த சின்னம், உங்கள் உள்ளங்கையிலும் இருந்தால், இந்த உலகத்தில் உங்களை ஜெயிக்க யாராலும் முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.