நொடிந்து போன தொழிலும் அமோக வெற்றியைப் பெறமுடியும். ஒரு துளி அளவு, இந்த தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும்.

shivan

நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிசைந்து வைத்து கும்பிட்டாலும், அதில் இறைவன் வாசம் செய்வார். நம்பிக்கை இல்லாமல் தங்கத்தால் சிலையை வடித்து இறைவழிபாடு செய்தாலும், அதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்பிக்கை தான் நம்முடைய முதல் கடவுளாக இருக்க வேண்டும் என்பதை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொண்டு பரிகாரத்திற்கு செல்வோம். இந்த ஒரு சிறிய பரிகாரத்தை உங்களுடைய வீட்டிலும் செய்யலாம், தொழில் செய்யும் இடம், கடை இப்படி எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.

நிறைய கடைகள் இருக்கும் வீதியில், நம்முடைய கடையும் இருக்கும். அக்கம் பக்கத்தில் இருக்கும் கடைகளில் வரக்கூடிய கஸ்டமர் கூட, நம்முடைய கடைக்கு வருகை தர மாட்டார்கள். இதை என்னவென்று சொல்வது? நம்முடைய துரதிஷ்டம் தான். சொல்லப்போனால் அந்த கடையில் இருக்கும் தரத்தை விட, அந்த கடையில் இருக்கும் பொருட்களை விட நம்மிடம் இருக்கும் பொருட்களின் தரம் அதிகமாக இருக்கும். அடுத்தவர்களை குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். (அடுத்தவர்களை விட, நாம் சரியாக இருக்கும் பட்சத்திலும் நமக்கு முன்னேற்றம் இருக்காது என்பதற்காக சொல்லப்படும் விஷயம் இது.)

ஆனால் நம்முடைய தொழில் மட்டும் முன்னேறாமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும். நம்முடைய நேரமும் காலமும் ஒரு காரணமாக இருக்கலாம். தேவையற்ற கெட்ட சக்திகளின் ஆதிக்கம் ஒரு காரணமாக இருக்கலாம், அல்லது நாம் இருக்கும் இடம் ராசி இல்லாமல் இருக்கலாம். இப்படி எதுவாக இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

sembu-sombu

நம்பிக்கை மிக மிக முக்கியம். நம்பிக்கையோடு இந்த தண்ணீரை தெளித்து விட்டு, உங்களது தொழிலை முன்னேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை நீங்கள் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவிலான உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடி டம்ளர் அல்லது பீங்கான் பவுல் எதை வேண்டும் என்றாலும், இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். சில்வர் பாத்திரத்தை பயன்படுத்த வேண்டாம்.

- Advertisement -

பித்தளை, செம்பு சொம்பு இருந்தாலும் கூட அதை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீரை கண்ணாடி டம்ளரில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் மஞ்சள் பொடி, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், முக்கியமாக இந்த தண்ணீரில் நாம் போட்டு வைக்க வேண்டிய ஒரு பொருள் ருத்ராட்சம். உங்களுடைய வீட்டில் எந்த ருத்ராட்சம் இருந்தாலும் சரி, அதை இந்த தண்ணீரில் போட்டு வைக்கலாம். ஆனால் அந்த ருத்ராட்சம் ஒரிஜினல் ருத்ராட்சமா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். கழுத்தில் கட்டியிருக்கும் ருத்ராட்சத்தை எடுத்து பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.

ruthratcham

தயார் செய்து வைத்திருக்கும் இந்த டம்ளர் தண்ணீரை அப்படியே உங்கள் பூஜை அறையில் வைத்து விட வேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. திறந்தே இருக்கலாம். ஒரு நாள் இரவு பூஜை அறையிலேயே இந்த டம்ளர் தண்ணீரை வைத்துவிட்டு, அதன் பின்பு, மறுநாள் காலை உங்களது தொழில் செய்யும் இடத்தை காலை நேரத்தில் திறந்த பின்பு, வாசலை கூட்டி விட்டு, கடை உள் பக்கமும் சுத்தம் செய்துவிட்டு, இந்த தண்ணீரை எடுத்து மூலைமுடுக்குகளில் ‘சிவ சிவ’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே தெளித்து விட வேண்டும். வாசல் பகுதியில் இரண்டு பக்கங்களிலும் தெளிக்கவேண்டும். நடுவே தெளிக்க வேண்டாம். கால் படும் இடங்களில் இந்த தண்ணீரை தெளிக்க கூடாது.

theertham

இதே தண்ணீரை இரண்டு மூன்று நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். மீண்டும் பழைய தண்ணீரை ஊற்றிவிட்டு, புதிய தண்ணீரை வைத்து இந்தப் பொருட்களையெல்லாம் மீண்டும் போட்டு மீண்டும் மீண்டும் இந்த தண்ணீரை தினம்தோறும் தெளிக்கும் வழக்கத்தை கொண்டு வரலாம்.

poojai arai

ருத்ராட்சத்தை மட்டும் அதே ருத்ராட்சத்தை, மீண்டும் நல்ல தண்ணீரில் கழுவி பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை. உங்களுடைய வீட்டிலும் தொடர் கஷ்டம் இருக்கிறது எனும் பட்சத்தில், இதேபோல் தண்ணீரை வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு, வீட்டு நிலை வாசல் படியில் இரண்டு பக்கத்திலும் தெளிக்கலாம். வீட்டிற்குள்ளும் மூலை முடுக்குகளில் தெளித்து விடலாம். நிச்சயமாக கஷ்டம் படிப்படியாக குறையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இந்த விளக்கை மட்டும் உங்கள் வீட்டில் மூலையில் போட்டு வைத்தால் இதெல்லாம் தான் நடக்கும் தெரிந்து கொள்ளுங்கள்! இந்த விளக்கை ஏற்றினால் தான் வருமானம் தடையில்லாமல் வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.