இந்த விளக்கை மட்டும் உங்கள் வீட்டில் மூலையில் போட்டு வைத்தால் இதெல்லாம் தான் நடக்கும் தெரிந்து கொள்ளுங்கள்! இந்த விளக்கை ஏற்றினால் தான் வருமானம் தடையில்லாமல் வரும்.

kuthu-vilakku-cash

நாம் நம்முடைய வீட்டில் எல்லா விதமான விளக்குகளையும், பூஜைப் பொருட்களையும் வைத்திருந்தாலும் கூட இந்த ஒரு விளக்கிற்கு எதுவுமே இணையாகாது. ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் இந்த விளக்கை நிறைய பேர் வீட்டின் மூலையில் போட்டு வைத்து இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இந்த விளக்கின் தத்துவமே மகத்துவமானது. இந்த தீபத்தை ஏற்றுவதால் தொழில் விருத்தி ஏற்படும், வருமானம் பெருகும் என்பது தான் ஐதீகம். வருமானம் அதிகரிக்க கூடிய விளக்கு இப்படி மூலையில் போட்டு வைத்தால் எப்படி செல்வம் பெருகும்? அப்படி நாம் எந்த விளக்கை பற்றி பார்க்க இருக்கிறோம்? என்பதை இப்பதிவில் மேலும் காணலாம் வாருங்கள்.

kamatchi-vilakku

காமாட்சி விளக்கு என்பது மிகவும் விசேஷமான விளக்கு தான். இன்று காமாட்சி விளக்கு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். எல்லோருமே கிட்டத்தட்ட காமாட்சி விளக்கை மட்டுமே வீடுகளில் ஏற்றி வருகிறோம். ஆனால் முந்தைய காலங்களில் எல்லாம் காமாட்சி விளக்கை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள் என்பது தான் உண்மை. குத்து விளக்கை தான் நம் முன்னோர்கள் வீட்டில் தினமும் ஏற்றி வைப்பார்கள். ஆனால் இன்றோ குத்து விளக்கு என்பது எப்போதாவது விசேஷ, பண்டிகை காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குத்து விளக்கு என்றால் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். இதை தேய்த்து சுத்தம் செய்வதற்கும் சிரமமாக தான் இருக்கும். அதனாலேயே பெரும்பாலும் குத்துவிளக்கு தவிர்க்கப்படுகிறது. ஏதாவது ஒரு ஹோமம் செய்கிறோம், பண்டிகை வருகிறது, விசேஷங்கள் நடக்கிறது என்றால் மட்டுமே குத்துவிளக்கை வீட்டின் மூலையில் இருந்து எடுத்து கழுவி சுத்தம் செய்து பூஜைக்கு உபயோகப்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் குத்துவிளக்கு ஏற்றுவது தான் விசேஷமான பலன்களை நமக்கு கொடுக்கும். காமாட்சி அம்மன் விளக்கும் குத்துவிளக்கிற்கு இணையானது தான் என்றாலும் குத்துவிளக்கிற்கு தனி தத்துவங்கள் உள்ளன.

ainthu-muga-vilakku

குத்து விளக்கு என்பது மங்களகரமான தெய்வீக விளக்காகும். இதன் அடிப்பகுதி பிரம்ம அம்சமாகவும், நடுவில் இருக்கும் தண்டுப்பகுதி மகாவிஷ்ணுவையும், மேலிருக்கும் பகுதி சிவனுடைய அம்சமாகவும் கருதப்படுகிறது. மேலும் அதில் ஊற்றப்படும் நெய் நாதமாகவும், போடப்படும் திரியானது பிந்துவாகவும், பின்பு சுடர் அலை, கலை மகளாகவும், ஏரியப்படும் ஜோதியானது மலைமகளாகவும் தத்துவம் உள்ளது. மேலும் ஜோதிட ரீதியாக இரண்டு குத்து விளக்கிலும் போடப்படும் 10 தீபங்கள் பத்தாம் எண்ணிற்குரிய பலன்களை கொடுப்பதாக நம்பப்படுகிறது. பத்தாம் எண் என்பது வருமானத்திற்கு உரிய இடம் என்பதால் தங்குதடை இல்லாமல் வருமானத்தை பெற குத்துவிளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது.

- Advertisement -

வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை, மாலை இருவேளையும் ஐந்துமுக குத்து விளக்கில், ஐந்து திரிகளையும் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வந்தால் வீட்டில் வருமான தடை என்பது ஏற்படவே செய்யாது. நீங்கள் தொழில், வியாபாரம், உத்தியோகம் என்று எதை செய்தாலும் அதில் தங்கு தடையில்லாத வருமானம் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் சுபீட்சம் எப்போதும் நிலைத்து இருக்கும். எந்த ஒரு தீய சக்திகளும் உங்கள் வீட்டை அணுகாது. திருஷ்டி தோஷங்கள், செய்வினை கோளாறுகள் எதுவும் உங்களை நெருங்கக் கூட முடியாது. அந்த அளவிற்கு விசேஷ பலன்களை கொடுக்கக்கூடிய குத்துவிளக்கை மூலையில் போட்டு வைத்தால் எப்படி செல்வம் பெருகும்?

vilakku1

குத்து விளக்கில் பசு நெய் ஊற்றி தீபமேற்றினால் செல்வம் பெருகும், நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும், விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் புகழ், பதவி கிடைக்கும், இலுப்பை எண்ணெயில் ஏற்றினால் அறிவு வளரும், புங்க எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் முன்னோர்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கும். அது போல் கிழக்கு நோக்கியபடி எரிய விட்டால் எத்தகைய துன்பங்களும் நீங்கிவிடும். மற்றும் கிரக தோஷங்கள் நீங்க மேற்கு முகமாக குத்து விளக்கை ஏற்றலாம். சுபகாரியத்தடை, சிறந்த கல்விக்கு வடக்கு முகமாக குத்து விளக்கு ஏற்றலாம். தெற்கு முகமாக ஏற்றுவது அப சகுணங்களையும், பாவத்தையும் சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருளை தொடர்ந்து தானம் கொடுத்து வந்தால், சகல தோஷமும் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயர்ந்து கொண்டே செல்லும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.