எப்படிப்பட்ட பித்ருசாபமாக இருந்தாலும், முன்னோர்களின் சாபமாக இருந்தாலும், இந்த ஒரு பரிகாரத்தை, ஒரு முறை செய்தால் கூட போதும். பாவத்திற்கு விமோசனம் கிடைத்து விடும்.

sabam

இன்றைய காலத்தில் பித்ரு சாபம் முன்னோர்கள் சாபம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும், எல்லாவிதத்திலும் தெரிந்து தான் இருக்கின்றது. ஆனால், தங்களுடைய குடும்பத்திற்கு இப்படிப்பட்ட சாபகங்கள் இருந்தால், அதற்கான விமோசனங்களை தான் எப்படி தேடுவது என்று தெரியவில்லை. அந்த வரிசையில் உங்களுடைய குடும்பத்திற்கு தீராத கஷ்டங்கள், தீராத துன்பங்கள், தீராத நோய்கள் வாரிசு இல்லாமல் இருப்பது, போன்ற எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். பரிகாரம்  என்று கூட சொல்ல வேண்டாம். பிராயச்சித்தம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

sabam

ஆன்மீக ரீதியாக உங்களுடைய பாவங்களைப் போக்க, நீங்கள் எதை செய்து இருந்தாலும், கொஞ்சம் சிரமப்பட்டு இதையும் செய்து தான் பாருங்களேன். இதை ஒரு முறை செய்தால் உங்களுக்குள் இருக்கக்கூடிய தோஷங்கள் பாவங்கள் அனைத்தும் ஒரு நொடிப்பொழுதில் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக, நாம் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுக்கான சாபத்தை, அடுத்தவர்கள் நமக்கு கொடுத்தால், அந்த சாபமானது ஏழு வருடங்கள் வரை இருக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம். அந்த வகையில் உங்களுக்கு அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் நண்பர்கள் கொடுத்த சாபமாக இருந்தாலும் சரி, உங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய பூர்வஜென்ம சாபமாக இருந்தாலும் சரி, அது நிச்சயமாக இந்த பரிகாரம் செய்வதன் மூலம் நீங்கிவிடும்.

pragnency

கர்ப்பிணி பெண்களுக்கு, அதாவது பணம் காசு இல்லாமல் இருக்கும் கர்பிணி பெண்களுக்கு, பிரசவ நேரத்தில் தேவைப்படக்கூடிய சௌகரியங்களை நீங்கள் செய்து தரவேண்டும். பிரசவ காலத்தில் பெண்களுக்கு இன்றைய சூழ்நிலையில் ஆகும் செலவு அதிகம். அந்த செலவை நீங்கள் மனமார ஏற்றுக் கொண்டாலும், உங்களுக்கு இருக்கக்கூடிய சாபம் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் நல்லபடியாக பிரசவிக்க நீங்கள் உதவியாக இருக்கவேண்டும் அவ்வளவு தான்.

- Advertisement -

அதாவது ஒரு உயிரை இந்த பூலோகத்திற்கு கொண்டு வரும்போது அந்த உயிரை பாதுகாக்க நீங்கள் செய்யும் சிறு உதவி தான் இது. இருப்பினும் இது உங்களுக்கு பெரிய புண்ணியத்தை தேடித்தரும். அப்படி இல்லை என்றால் ஒரு வயதில் இருந்து மூன்று வயதுக்குள் இருக்கக்கூடிய குழந்தைக்கு உதவி செய்ய வேண்டும்.

baby

பணம் காசு இல்லாமல் எவ்வளவு குழந்தைகள் தீராத வியாதியில் அவதிப்பட்டு வருகிறது. அந்த வியாதியை குணப்படுத்த, வியாதிக்கான மருந்து செலவை நிரந்தரமாக நீங்கள் ஏற்றுக் கொண்டால், உங்களுக்கான விமோசனம் உடனடியாக கிடைத்துவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

happy-family

இந்த இரண்டு விஷயங்களில் நீங்கள் செய்த பாவம் கரைந்து போவதோடு, உங்களுக்கு அடுத்து வரக்கூடிய பரம்பரைக்கே புண்ணியத்தை சேர்த்து வைக்கக் கூடிய சூழ்நிலை உங்களுக்கு அமைந்துவிடும். சந்தர்ப்பம் கிடைத்தால், தவறாமல் இந்த இரண்டு விஷயங்களை செய்து பாருங்கள்! நிச்சயமாக உங்களுடைய வாழ்வில் மாற்றத்தை உணரலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
வாட்டி எடுக்கும் கவலைகளும் நொடியில் தீர செவ்வாய்க் கிழமையில் முருகப் பெருமானுக்கு இதை உச்சரியுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.