வாட்டி எடுக்கும் கவலைகளும் நொடியில் தீர செவ்வாய்க் கிழமையில் முருகப் பெருமானுக்கு இதை உச்சரியுங்கள்!

murugan-vel

நம் வாழ்க்கையில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளை கூட ஒன்றுமே இல்லாமல் செய்யக் கூடிய ஆற்றல் தெய்வீக சக்திக்கு உண்டு. ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை! சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை’ என்று கூறுவதிலிருந்து முருகனுடைய அதீத சக்திகளை நம்மால் உணர முடிகிறது. சிவன் பார்வதிக்கு மகனாகப் பிறந்த முருகப்பெருமான் சத்ருக்களை வதம் செய்து உலகிற்கு தன்னுடைய ஆற்றல் என்ன என்பதை நிரூபித்தார். நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் அவைகள் யாவும் நொடியில் நீங்கி, பகைவர்கள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அதை எப்படி உச்சரிக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

murugan1

உங்களுக்கு வாழ்க்கையில் வாட்டி வதைக்கும் அளவுக்கு பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால் நீங்கள் ஏதாவது ஒரு செவ்வாய்க் கிழமையில் முருகனுடைய வேல் வைத்து அதற்கு வழிபாடுகள் செய்து இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்! எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இதனால் உடனே நீங்கும் என்பது ஐதீகம். செவ்வாய் கிழமையில் வீடு, பூஜை அறை போன்றவற்றை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் முருகன் படத்திற்கு வாசனை மலர்களால் மாலை சாற்றி, அவருடைய வேலை சுத்தம் செய்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு கொள்ள வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சரிசி நிரப்பி அதில் அந்த வேலை சொருகி வைக்க வேண்டும். பின்னர் தூப, தீப, ஆராதனைகள் காண்பித்து கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் தீராத துன்பங்களும் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்.

Lord Murugan Vel

ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா ஸ்லோகம்:
எனது சங்கடங்கள் அனைத்தும் விலகிடச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா!
நவக்கிரகங்கள் ஒன்பதும் நன்மையே அருளச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா!
சகல விதமான தோஷங்களும் என்னை விட்டுப் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா!
எல்லா விதமான வருத்தங்களும் என்னை விட்டு அகல வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா!

- Advertisement -

துக்கங்களிலிருந்து நிவாரணம் எனக்குக் கிடைக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா!
என்னுடைய தாபங்கள் தீர்ந்து விட அருள் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா!
பாவங்கள் என்னிடம் நெருங்காமல் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா!
என்னை வாட்டுகிற நோய்கள் உடலை விட்டு ஓடிவிடட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா!

murugan1

எதிரிகள் என்னை விட்டு விலகிப் போவார்களாக ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா!
உடல் சார்ந்த நோய்கள் தீர்ந்து போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா!
என்னைச் சுற்றுகிற பீடைகள் மறைந்து விடட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா!
எனக்கு பயம் என்பதே இல்லாமல் போக வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா!

Lord Murugan Vel

தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் தோறும் இது போல் வீட்டில் செய்து வந்தால் வேலாயுதத்தின் சக்தியால் நம்மை சுற்றியுள்ள அத்தனை பிரச்சனைகளும் நீங்கி நமக்கு நல்ல ஒரு பாதை பிறக்கும். துன்பம் வந்து விட்டதே என்று துவண்டு போகாமல் அதை எப்படி நீக்க முடியும் என்று இறைவனிடமே வழி கேட்டால் நல்லதே நடக்கும்.

இதையும் படிக்கலாமே
தினமும் குளிக்கும் முன் இந்த மந்திரத்தை சொல்லி விட்டு தண்ணீரை ஊற்றுங்கள்! பாவத்தை போக்கக்கூடிய கங்கையில், நீராடிய பலன் கிடைக்கும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.