‘யாரோ விட்ட சாபம்!’, இன்று உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கின்றதா? சாபத்திலிருந்து விடுபட சுலபமான பரிகாரம்!

maailai

ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என்றால், கட்டாயம் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கர்மவினை காரணமாக இருக்கும். அந்த வினை யாரோ ஒருவர் நமக்கு விட்ட, சாபமாக கூட இருக்கலாம். எத்தனையோ குடும்பங்கள், சில சாபத்தினால் கடைசிவரை தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு, வாரிசு கூட இல்லாமல் அழிந்து, போயிருக்கின்றது. ஒரு குடும்பத்தையே பஸ்பமாகும் அளவிற்கு, அடுத்தவர்கள் வயிறு எரிந்து விடும் சாபம் பலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாபம் உங்களுக்கு இருந்தது என்றால், அதை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சேதாரம் இல்லாத 8 மாஇலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் தேங்காயை உடைத்து, துருவி, அந்த தேங்காய் துருவலில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து பிசைந்து, தேங்காய் சர்க்கரை சேர்த்த கலவையை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் கட்டாயம், உங்கள் வீட்டு குலதெய்வத்தின் படம் இருக்கும். அந்த குலதெய்வத்தின் முன்பாக மாஇலைகளை அடுக்கி வைத்துவிட வேண்டும். ஒரு மாயிலை பக்கத்தில், இன்னொரு மாயிலையை வைத்து வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு, காம்பு பக்கம் இறைவனை பார்த்தவாறு இருக்க வேண்டும். நுனி பக்கம் உங்களை பார்த்தவாறு இருக்க வேண்டும்.

அந்த மாஇலையின் மேல், தேங்காய் துருவல் சர்க்கரை கலந்த கலவையை, ஒரு ஸ்பூன் அளவு வைக்க வேண்டும். இப்படி, தேங்காய் சர்க்கரை கலவையை, நைவேத்தியமாக மாஇலையின் மீது, குலதெய்வத்துக்கு படைத்து உங்களுக்கு இருக்கும் சாபம் நிவர்த்தி ஆக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இந்த பரிகாரத்தை யார் வேண்டும் என்றாலும் அவரவர் வீட்டிலேயே செய்யலாம். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும் அதற்கான விமோசனம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Maavilai thoranam

அஷ்டமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். தொடர்ந்து 8 அஷ்டமி திதிகள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும், அது கட்டாயம் நிவர்த்தி அடையும். முழுமையாக நிவர்த்தி அடையவில்லை என்றாலும், அந்த சாபத்தின் தாக்கமானது கட்டாயம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதே போல் கண்ணுக்குத் தெரியாத தோஷமாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சாபமாக இருந்தாலும், விலக வேண்டும் என்றால் சிறிதளவு அருகம்புல்லை எடுத்து வந்து, உங்கள் தலையில் வைத்து, தண்ணீர் ஊற்றி தலை மூழ்க வேண்டும். அல்லது ஆவாரம்பூ பொடி, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. அந்தப் பொடியை வீட்டில் வாங்கி வைத்து, ஒரு ஸ்பூன் அளவு, எடுத்து தலையில் தேய்த்து, தலைக்கு குளிக்க வேண்டும். மாதம் ஒருமுறை இந்த இரண்டு குளியலில், ஏதாவது ஒரு குளியலை செய்தாலே போதும். கண்ணுக்குத் தெரியாத தோஷமாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சாபமாக இருந்தாலும் கட்டாயம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

avarampoo-powder

பௌர்ணமி தினத்தில் இப்படி குடித்தால், உங்களுக்கு இருக்கும் தோஷமும் சாபமும் முழுமையாக நீங்கும் என்பது உறுதி. தொடர்ந்து 11 மாத பௌர்ணமி தினங்களில், இப்படி குளித்து வர வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Moon

உங்களுக்கு, யார் எப்படிப்பட்ட கெடுதல் செய்தாலும், உங்கள் மனதார யாரையும் சபித்து விடாதீர்கள்! சில நேரங்களில் எதிர்பாராமல், நம் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளானது, அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் பெரிய விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. அடுத்தவர்களுடைய வாழ்க்கை கெட்டுப் போவதற்கு எக்காரணத்தைக் கொண்டும், நாம் விட்ட சாபம் காரணமாக இருக்கக் கூடாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு பரிகாரத்தை செய்தாலும் நம்பிக்கையோடு செய்து பலன் அடைய வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் பரமபதம், தாயம் விளையாடினால் தரித்திரம் பிடிக்குமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sabam neenga. Pen sabam neenga pariharam. Saba vimochanam pariharam. Munnorgal sabam theera