வாழ்வில் நீங்கள் பெறக்கூடாத இந்த 3 சாபங்களை போக்கும் அற்புதமான பரிகாரங்கள்!

sabam-sandikeswarar
- Advertisement -

சாபங்கள் மொத்தம் 13 வகையாக சாஸ்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களால் நமக்கு கொடுக்கப்படும் சாபங்கள் உண்மையில் பாவமாக மாறி துன்பங்களைக் கொடுக்கும். அதனால் தான் மற்றவர்களின் சாபத்திற்கு எப்போதும் ஆளாகக் கூடாது என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். 13 வகை சாபங்களில் மூன்று வகையான சாபங்களை தவறியும் நாம் பெற்று விடக்கூடாது. அப்படியான சாபங்கள் என்னென்ன? அதற்கான தீர்வு தான் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

kannagi 4

முதலில் சாபம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். சாபம் என்பது நம்முடைய கடமையை சரியாக செய்யாமல் ஒருவரை ஏமாற்றுவதும், அவர்களை துன்புற வைத்து வேடிக்கை பார்ப்பதும் மிகப்பெரிய பாவமாக சாஸ்திரம் கூறுகிறது. இந்தப் பாவத்தை செய்தவர்களுக்கு, அதை அனுபவித்தவர்கள் மிகவும் மனம் நொந்து, வயிறு எரிந்து, உங்களை ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவித்து நிற்கும் பொழுது வார்த்தைகளால் அவர்கள் சொல்லும் சுடு சொற்களை தான் ‘சாபம்’ என்று கூறுகிறார்கள். இவை மிகவும் வலிமை வாய்ந்தவை. பதிலுக்கு அவர்களும் உங்களை பழி வாங்கி விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் தான் அவர்கள் அனுபவிக்கும் வேதனையானது சாபமாக மாறுகின்றன.

- Advertisement -

இதில் குறிப்பாக மூன்று வகை சாபங்கள் மிகப்பெரிய சாபமாக கூறப்படுகிறது. முதலில் பெற்றோர்களின் சாபம். அவர்கள் இல்லை என்றால் நீங்கள் இந்த உலகத்தில் இல்லவே இல்லை. அப்படி இருக்கும் பொழுது பெற்றோர்களின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொள்வது என்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தெரிந்தோ, தெரியாமலோ இந்த வகையான சாபத்தை நீங்கள் பெற்றிருந்தால் அதன் பாதிப்பிலிருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது.

sandikeswarar

இதனால் வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டங்களையும், வேதனையையும் நீங்கள் சந்திப்பீர்கள். இதற்கு பரிகாரமாக நீங்கள் ஆலயத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறந்த பலனாகும். சண்டிகேஸ்வரர் சிவபெருமானுக்கு காவலராக இருக்கக்கூடியவர். இவரை தொந்தரவு செய்யாமல் பௌர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் சண்டிகேஸ்வரர் சன்னிதியில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் இட்ட சாபத்தை நீக்கும் படி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இரண்டாவதாக சுமங்கலியாக இருக்கும் ஒரு பெண்ணின் சாபத்தை வாங்கி கட்டிக் கொண்டவர்கள் அதற்குரிய கஷ்டங்களை அனுபவித்து தான் கொண்டிருப்பார்கள். சுமங்கலிகள் கண்ணீர் மல்க விடும் சாபங்கள் நிச்சயம் அடுத்தவர்களை அவ்வளவு சுலபமாக விட்டு விடாது என்பார்கள். இந்த சாபத்திலிருந்து பாவ விமோசனம் பெற நந்தி பகவானை திருதியை திதியில் அபிஷேகம் செய்து பாவ விமோசனம் அருளுமாறு செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வது நல்ல பலன் தரும்.

Nanthi

மூன்றாவதாக சகோதர, சகோதரிகள் அதாவது உடன்பிறந்தவர்கள் உடைய சாபங்களை வாங்கிக் கொண்டவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. உடன் பிறந்தவர்களை ஏமாற்றுவது, துன்பப்பட செய்வது மிகப்பெரிய பாவமாகும். பாவம் செய்து விட்டு பின்னர் பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்று எப்போதும் நினைக்கக் கூடாது. உண்மையிலேயே செய்த பாவத்திற்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் அஷ்டமி திதியில் பைரவருக்கு விளக்கு ஏற்றி இந்த சாபம் நீங்க வழிபாடு செய்ய வேண்டும். பரிகாரத்தை செய்தவர்கள் மீண்டும் பாவம் செய்வது மன்னிக்க முடியாத குற்றமாக மாறிவிடும் என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்.

இதையும் படிக்கலாமே
கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய, இதுவரை சொல்லப்படாத சில ஆன்மீக குறிப்புகள் உங்களுக்காக இதோ!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -