- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசாபம் விலக சிவராத்திரி வழிபாடு

சாபம் விலக சிவராத்திரி வழிபாடு

- Advertisement -

சில குடும்பத்தில் ஒரு நல்லது அவ்வளவு சுலபத்தில் நடக்காது. ஒரு நல்லதை நடத்த பல போராட்டங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். திருமண பாக்கியம் கைகூடி வரவில்லை. 30 வயதை கடந்தும் திருமணமாகாமல் இருக்கிறார்கள். திருமணம் நடந்தால் குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை பிறந்தால் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை, வீட்டில் அமைதி இல்லை, எதிர்ப்பாராத மரணத்தால் துக்கம் வரும். நிம்மதி இல்லை.

இப்படி ஏதாவது ஒரு தொந்தரவு. கணவனுக்கு நல்ல வேலை இல்லை, வேலை கிடைத்தால் நல்ல சம்பளம் இல்லை. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஒரு குடும்பத்தில் வருவதற்கு என்ன காரணமாக இருக்கும். ஏதோ ஒரு வகையில் யாரோ விட்ட சாபம். குடும்ப உறுப்பினர்களுடைய ஜாதக கட்டத்தில் இருக்கும் சாபம்.

- Advertisement -

போன ஜென்மம், அதற்கு போன ஜென்மம் யார் யாரோ செய்த பாவங்கள் எல்லாம் இப்போது எங்களுடைய குடும்பத்தை வந்து சேர்ந்து விட்டது. இந்த சாபத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்வது. வரும் சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு உங்கள் கையால் இந்த பூவை வாங்கிக் கொடுத்து, இந்த பூஜையில் மட்டும் கலந்து கொள்ளுங்கள் போதும். உங்களுடைய குடும்ப சாபங்கள் விலகி குடும்பத்தில் நல்லது நடக்க தொடங்கும்.

சிவராத்திரி மூன்றாம் கால வழிபாடு

26-2-2025 புதன்கிழமை மகாசிவராத்திரி ஆனது வரவிருக்கிறது. இந்த சிவராத்திரிக்கு மூன்றாம் கால பூஜையில், ஈசனுக்கு உங்கள் கையால் தாழம்பூவை வாங்கி கொடுக்க வேண்டும். தாழம்பூ, இது பூஜைக்கு உகந்த பூ அல்ல. ஆனால் சிவராத்திரி அன்று 12 மணிக்கு நடக்கும் மூன்றாம் கால பூஜையில் சிவபெருமானுக்கு இந்த தாழம் பூவை சூட்டுவார்கள்.

- Advertisement -

எவர் ஒருவர் சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு மூன்றாம் கால பூஜைக்கு தாழம்பு வாங்கி கொடுத்து, அந்த அபிஷேக ஆராதனைகளை பார்த்து, பிரார்த்தனை செய்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு இருக்கும் சாபங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஈசனின் முன்பு அமர்ந்து ஈஸ்வரா எங்கள் குடும்பத்திற்கு இருக்கும் சாபத்தை நீ தான் விளக்கி வைக்க வேண்டும்.

எங்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு வேண்டிப் பாருங்கள். அன்றோடு உங்களுடைய கஷ்டங்கள் விலகிவிடும். சரி இந்த தாழம்புவிற்க்கு பின்னால் அப்படி என்னதான் கதை இருக்கிறது.

- Advertisement -

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரு முறை நீ, பெரியவனா நான் பெரியவனா என்ற சண்டை வரும்போது, பஞ்சாயத்திற்கு ஈசனிடம் சென்றனர். அப்போது சிவன் யார் என்னுடைய அடியையும் முடியையும் முதலில் பார்க்கிறீர்களா அவர்கள் தான் பெரியவர் என்று சொல்லிவிட்டார்.

பாதத்தை காண வேண்டும் என்று விஷ்ணுவும், முடியை காண வேண்டும் என்று பிரம்மாவும் தங்களுடைய பயணத்தை துவங்கினர். விஷ்ணு பூமிக்கு அடியில் தோண்டி பார்த்து பாதத்தை காண முடியாமல் தன்னுடைய அகந்தையிலிருந்து வெளிவந்து, ஈசனிடம் சரண் அடைந்து விட்டார். ஈசன் அவருக்கு காட்சி தந்து அருள் ஆசையே வழங்கினார்.

ஆனால் பிரம்மாவோ தலைகனத்தோடு, தலைமுடியை காண வேண்டும் என்று உயரமாக பறந்து சென்றார். ஆனாலும், அவருக்கு ஈசனின் தலை முடி கிடைக்கவில்லை. வழியில் ஒரு தாழம்பூ வந்து கொண்டிருந்தது. அந்த தாழம்பூவை பார்த்து நீ எங்கிருந்து வந்தாய் என்று பிரம்மன் கேட்க, “அந்த தாழம்பு சொன்னது”, நான் சிவபெருமானின் தலையில் இருந்து கீழே வந்து கொண்டிருக்கிறேன் என்று.

அந்த தாழம்பூவிடம் பிரம்மா, “சிவனின் தலைமுடியை பார்த்து விட்டதாக, சிவபெருமானிடம் பொய் சாட்சி கூற வேண்டும்” என்று பிரம்ம தேவர் கோரிக்கை வைக்கிறார். பிரம்மதேவர், சிவபெருமானின் தலைமுடியை பார்த்து விட்டதாக, தாழம்பூவும் சிவபெருமானிடமும் சாட்சி சொன்னது.

இந்த பூலோகத்தையே ஆளும் கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு தெரியாத எது உண்மை என்று? பொய் சொன்ன தாழம்பூ சிவபெருமானிடம் மாட்டிக் கொண்டது. சிவபெருமானின் தலையில் இருந்த தாழம்பூ பிரம்மனுக்காக பொய் சொன்னதால், இனிமேல் தாழம்பூ பூஜைக்கு உகந்த பூ அல்ல, என்று சிவபெருமான் சாபம் கொடுத்து விட்டார். சிவபெருமானுக்கு தாழம்பூவை எந்த காலத்திலும் சூட்டவே மாட்டார்கள். இருந்தாலும் தாழம்பூ விடவில்லை. சிவபெருமானிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டது. சிவபெருமான் தாழம்பூக்கு ஒரு மன்னிப்பையும் வழங்குகிறார். அதற்கான சாப விமோசனத்தையும் கொடுக்கின்றார்.

சரி, நீ பொய் சொன்னதற்காக, உன்னை எந்த பூஜைக்கும் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் சிவராத்திரி அன்று மூன்றாம் கால பூஜையின்போது மட்டும் உன்னை எனக்கு சூட்டி வழிபாட்டை மேற்கொள்ளுவார்கள். இப்படி வழிபாடு செய்யக்கூடிய பக்தர்களுக்கும், சாப விமோசனமானது வழங்கப்படும் என்று, சிவபெருமான் தாழம்பூவுக்கு ஒரு வரத்தை கொடுத்து விட்டார். இதுதாங்க கதை. வரலாறு இதை தான் சொல்கிறது.

நாமும் தாழம்பூவை மூன்றாம் கால பூஜைக்காக சிவபெருமானுக்கு வாங்கி கொடுப்போம். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு வருந்தினால், நிச்சயம் சாப விமோசனம் கிடைக்கும். பத்தினி சாபம், பெண் சாபம், கன்னி சாபம், பித்ரு சாபம், வழியாக வரும் சாபம், மாதா சாபம், பிதா சாபம், குரு சாபம், ஆச்சாரியர்கள் சாபம், பரதேசிகள் சாபம், என்று எந்த சாபம் உங்கள் குடும்பத்தை தொடர்ந்தாலும் அந்த சாபத்திற்கு உடனடியாக விமர்சனம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் தரும் மந்திர வார்த்தை

மறக்காதிங்க பூ கடைக்காரரிடம் சொல்லி வையுங்கள். தாழம் பூவை வாங்கி சரியாக சிவராத்திரி அன்று சிவன் கோவில் அர்ச்சகர் இடம் கொடுத்து விடுங்கள். அவர்கள் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். தாழம்பூவை சிவனுக்கு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மூன்றாம் கால பூஜையில் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்