சபரி மலை கோவில் இன்று வளர்ந்து நிற்க யார் காரணம் தெரியுமா ?

Sabarimala Temple
- Advertisement -

கடந்த சில நாட்களாக நாட்டு மக்கள் அனைவரையும் உன்னிப்பாக கவனிக்க செய்த ஒரு விடயம் என்னவென்றால் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பாரம்பரிய சம்பிரதாயங்களை மீறி ஒரு சில பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நுழைய முயன்று, அது முடியாமல் திரும்பியது தான். சபரிமலை ஐயப்பன் கோவிலின் இந்த பிரச்சனையை தவிர்த்து, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கேரள, தமிழக பக்தர்கள் மட்டுமே அதிகம் சென்று வழிபட்ட சபரிமலை ஐயப்பன் கோவில், இன்று நாடு முழுவதும் புகழ் பெற்று, பல கோடிக்கணக்கான பக்தர்களை எவ்வாறு பெற்றது என்பதையும், அதில் தமிழர்களின் பங்கு என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

ayyapan

“சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம்” தேசிய இணைச் செயலாளர் திரு. துரை சங்கர் கூறும் போது இந்து மதத்தில் இருக்கும் இரண்டு முக்கிய பிரிவான சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு கோட்பாடுகளும் ஒன்றாக இணையும் உருவமாகவே ஸ்ரீ ஐயப்பன் கருதப்படுகிறார். ஐயப்பனின் சரித்திரத்தின் படி பந்தள மகாராஜாவின் வளர்ப்பு மைந்தனாக 12 வரை இருந்து, தனது அவதார நோக்கம் பற்றி அறிந்த பிறகு ஸ்ரீ ஐயப்பன் சபரிமலைக்கு வந்து இங்கேயே தவக்கோலத்தில் இருந்தவாறே தனது பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலிக்கிறார்.

- Advertisement -

1894 ஆம் ஆண்டு காலத்திலேயே சபரிமலைக்கு 15,000 என்கிற அளவில் பக்தர்கள் வந்ததற்கான எழுத்துபூர்வமான சான்றுகள் இருக்கின்றன. அக்காலகட்டத்தில் தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே வெறும் 5 கோடி தான். 1940 ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டை சேர்ந்த நாடக கலைஞர் “நவாப் ராஜமாணிக்கம்” என்பவர் ஐயப்பனை குறித்து பல்வேறு நாடகங்களை நடத்தி, தமிழக மக்களுக்கு ஐயப்பனின் புகழை பரப்பினார். 1950 ஆம் ஆண்டு சபரிமலை கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட போது, அக்கோவிலில் தேவப்பிரசன்னம் பார்க்கப்பட்டு, தமிழகத்தின் மறைந்த முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனின் தந்தை பி.டி.ராஜன் வடித்து தந்த ஐயப்பனின் சிலை தான் சபரிமலை சன்னிதானத்தில் இன்று அனைவரும் வழிபடும் ஐயப்பன் சிலையாக இருக்கிறது.

பிறப்பால் மலையாளியாகவும், கிறிஸ்தவராகவும் இருந்தாலும் திரைப்பட பின்னணி பாடகர் கே. ஜே. யேசுதாஸ் பாடிய “ஹரிவராஸனம் விஸ்வமோஹனம்” என்கிற புகழ்பெற்ற பாடலை பாடி முடித்த பிறகே இன்றும் ஐயப்பன் கோவிலின் நடை சாற்ற படுகிறது. புகழ் பெற்ற இந்த பாடலை எழுதிய “கம்பங்குடி ஸ்ரீகுளத்துஐயர்” திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சியை பூர்வீகமாக கொண்ட ஒரு தமிழர். இவ்வாறு சபரிமலை ஐயப்பனின் புகழை பரப்பி, பல்லாயிரக்கணக்கான பக்தர்களை அவருக்கு ஏற்படுமாறு செய்த தெய்வீக பணியில் தமிழர்கள் பலர் ஈடுபட்டனர் என கூறினார் திரு. துரை சங்கர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வழிபாடு

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sabarimala ayyappan valipadu in Tamil.

- Advertisement -