நீ சூப்பரா வருவ. இளம் வீரரை தன் வீட்டிற்கு அழைத்து பேட்டிங் ஆலோசனை வழங்கிய சச்சின். ஆனால் அவர் உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வாகவில்லை – இளம் வீரர் வேதனை

sachin

இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் 2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி விட்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவும் என்றும் இந்த இரு அணிகளில் ஒரு அணி கோப்பையை கைப்பற்றும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

worldcup

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி கிட்டத்தட்ட தயார் என்றே கூறவேண்டும். மேலும், தற்போதைய சூழலில் இந்திய அணியில் யாரையும் புதிதாக சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியாது. இந்நிலையில் சச்சின் இடம் சிறப்பு ஆலோசனைகளை பெற்ற இந்திய அணியின் இளம் வீரரான பிரிதிவி ஷா தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

அதில் ப்ரித்வி ஷா கூறியதாவது : இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கு பெற்று ஆடிவருகிறேன். ஆனால், எனக்கு இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளிலும் ஆட வாய்ப்பளிக்க வேண்டும். நான் நிச்சயம் என் திறமையினை வெளிப்படுத்துவேன் . இம்முறை இந்திய அணியின் தேர்வுக்குழு எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று கூறினார்.

prithvi-shaw

19 வயதே ஆகும் இந்த இளம்வீரர் 19வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை செய்து கோப்பையை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இளம் வீரரான இவருக்கு வாய்ப்பு அளித்து இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே :

நான் ரெடி : பண்ட் அணியில் இல்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இணைய உள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர் – வெல்கம் பேக்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்