நான் ரெடி : பண்ட் அணியில் இல்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இணைய உள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர் – வெல்கம் பேக்

Ashok

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இந்த மாத இறுதியில் வரும் 24ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரில் முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

Pant

அதன்படி துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது. மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் பண்டிற்கு இடம் கிடைக்கவில்லை. ரஹானே மற்றும் ராகுல் ஆகியோர் ஒருநாள் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.

தொடர் போட்டிகளால் ஓய்வில் இருந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மீண்டும் அணிக்கு இணைந்துள்ளார். அவரின் வருகை நிச்சயம் இந்திய அணிக்கு பலத்தினை அளிக்கும். அவரின் பந்துவீச்சு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

bumrah

இந்த தொடரில் மீண்டும் கேப்டனாக கிங் கோலி களமிறங்க உள்ளார். தோனிக்கு மீண்டும் கேப்டன் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கோலி அணிக்கு திரும்பியுள்ளார்.

இதையும் படிக்கலாமே :

புதிய காதல் : காதலர் தினமான இன்று தனது புதிய காதலை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா – என்ன ஒரு லவ் ரோஹித் உங்களுக்கு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்