இந்திய அரசின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால், இது என் விருப்பம். பாகிஸ்தான் உடனான உலகக்கோப்பை போட்டி குறித்து – முதல் முறையாக வாய் திறந்த சச்சின்

Sachin

கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

worldcup

அதன்காரணமாக இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டிகளில் ஆடக்கூடாது. மேலும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில் சச்சின் கூறியதாவது : இந்திய அணி பாகிஸ்தான் வுடன் விளையாட வேண்டும். ஏனென்றால் நாம் விளையாடவில்லை என்றால் அதனால் நமக்கு 2 புள்ளிகள் பறிபோகும். தவிர அந்த அணிக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை. இதனால், இந்திய அரசாங்கத்தின் மீது எனக்கு உடன்பாடு இல்லை என்று நினைக்க வேண்டாம். இந்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்டுவேன்.

Pakistan

அனால், இது என்னுடைய இந்திய குடிமகனாக தனிக்கருத்து ஆகும். இதே கூற்றினை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இந்த ஆண்டு ஐ.பி.எல் துவக்க விழா நடைபெறாது என்று அறிவித்த பி.சி.சி.ஐ – காரணம் இதுதான் ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்