சாதம் வடிக்கும் போது இதை மட்டும் செய்தால், உங்கள் குடும்பம் பல தலைமுறைக்கு ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்போடும் இருக்கும்.

annapoorani-rice
- Advertisement -

அந்தக் காலத்தில் நம்முடைய பாட்டி பின்பற்றி வந்த பல விஷயங்கள் இன்று நமக்கு தெரியாமலேயே போய்விட்டது. அப்படி நம்முடைய பாட்டிமார்கள் பின்பற்றிய ஒரு நல்ல விஷயத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அந்த காலத்தில் குறைவான பணத்தை வைத்துக்கொண்டு, வசதிகள் இல்லாமல், வாழ்ந்தாலும் மன நிறைவோடு சந்தோஷமாக நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.

இன்று எல்லா வசதிகளும் இருக்கிறது. தேவைக்கு அதிகமாக சில பேரிடம் பணம் இருந்தும், ஆரோக்கியம் இல்லாமல் மன நிம்மதி இல்லாமல் வாழக்கூடிய நிலைமை. ஆரோக்கியத்தை முழுமையாக பெறவும், அதே சமயம் செல்வக் கடாட்சத்தோடு, நிம்மதியாக வாழவும் சாதம் வடிக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும். நம்முடைய பாட்டிமார்கள் அப்படி எந்த ஒரு விஷயத்தை கடைப்பிடித்து வந்தார்கள் என்பதை பற்றி ஆன்மீகம் சார்ந்த பதிவை தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் உள்ளதா. இது உங்களுக்கான பதிவு.

- Advertisement -

ஆரோக்கியமாக வாழ சாதம் வடிக்கும் போது செய்ய வேண்டிய பரிகாரம்:
அந்தக் காலத்தில் எல்லாம் அடுப்பில் உலை வைத்துவிட்டு, சாதத்தை கழுவி அதில் போட்டு விடுவார்கள். சாதம் வெந்து வந்ததும், சிறிதளவு சாதத்தை எடுத்து அந்த அக்னி பகவானுக்கு, அந்த அடுப்பில் சமர்ப்பணம் செய்வார்கள். அதன் பிறகு தான் அந்த சாப்பாட்டு பானையை எடுத்து வடித்து பிறகு அந்த சாதத்தை அவர்கள் உண்ணு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

சாதத்தை கொஞ்சம் அடுப்பை சுற்றி போடுவது என்பது ஒரு யாகத்தை வளர்த்ததுக்கு சமமாக அந்த காலத்தில் சொல்லப்பட்டுள்ளது. இன்று நமக்கு அடுப்பும் கிடையாது. என்ன செய்வது. உங்கள் வீட்டில் சமைப்பதற்காக பயன்படுத்தும் சமையல் மேடையையும், ஸ்டவ்வையையும் தினமும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். சாதம் வடிப்பதற்கு முன்பு சாதம் வெந்ததும் அந்த சாதத்தை சிறிதளவு எடுத்து ஸ்டவ்வின் நான்கு மூலையில், இரண்டு இரண்டு பருக்கைகளை போட்டுவிட்டு, அதன் பின்பு சாதத்தை வடிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி சாதத்தை வடிக்கும் போது அன்னலட்சுமியிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இன்றைக்கு செய்த சாதம் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும். அதே சமயம் சாதம் வீணாகாமல் அனைவரும் விரும்பி சாப்பிட வேண்டும் என்ற வேண்டுதலையும் வைக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தாலே உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் கஷ்டம் படிப்படியாக குறையும். குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கிய செல்வம் மேம்படும்.

நமக்கு முன் வாழ்ந்த தலைமுறையினரால், அடுத்த தலைமுறைகளுக்கு அவர்கள் பின்பற்றிய விஷயத்தை சரியாக எடுத்துச் செல்ல முடியவில்லை. காரணம் அவர்கள் படிக்காமல் இருந்ததும் ஒன்று. இன்று நமக்கு எவ்வளவு தொழில்நுட்ப வசதி வளர்ந்து விட்டது. நீங்கள் செய்யக்கூடிய விஷயத்தை உங்கள் குடும்பப் பழக்க வழக்கங்களை எல்லாம் ஏதாவது ஒரு வகையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

- Advertisement -

உதாரணத்திற்கு டைரியில் எழுதி வைக்கலாம், அல்லது கம்ப்யூட்டரில் ஸ்டோர் செய்து வைக்கலாம், நீங்கள் சாமி கும்பிடும் வழக்கத்தை, குலதெய்வ பூஜை எல்லாம் கைபேசியில் வீடியோவாக எடுத்துக் கூட அடுத்த தலைமுறைக்கு பாதுகாக்கலாம். உங்கள் வீட்டு பழக்க வழக்கங்களை எப்படியாவது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இன்றைய ராம நவமி நாளில் ஒரே ஒரு ரூபாயை வைத்து இந்த பூஜையை மட்டும் செய்து விடுங்கள். இந்த ஒரு ரூபாயை வைத்து நீங்கள் ஒரு கோடி வரை சம்பாதிக்கும் யோகத்தை பெறலாம்.

இப்படி உங்கள் குடும்ப பழக்க வழக்கம் உங்களோடு முடிந்து போகாமல் இருக்க, உங்களால் முடிந்த முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டால் அது அனைவருக்கும் நன்மை தரக்கூடிய விஷயமாக அமையும். நம்முடைய கலாச்சாரமும் பண்பாடும் அழியாமலும் இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -