சங்கடங்கள் உங்களை விட்டு விலகி, சகல சந்தோஷமும் உங்களைத் தேடி வந்து ராஜா வாழ்க்கையைக் கொடுக்கும். விபூதியை நெற்றியில் இப்படி இட்டுக் கொண்டால்!

vibuthi
- Advertisement -

நம்முடைய நெற்றி என்பது எப்போதுமே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது. தூங்கும்போது கூட நெற்றியில் விபூதியோ, குங்குமமுமோ, சந்தனமோ ஏதோ ஒரு திலகம் வைத்து கொண்டு தான் தூங்க வேண்டும். ஏனென்றால் கெட்ட ஆற்றல், சீக்கிரமாகவே இந்த நெற்றிப் பொட்டின் மூலம் நம் உடலுக்குள் ஊடுருவி விடும். அந்த நெற்றிப் பொட்டை ஏதாவது ஒரு திலகத்தை வைத்து நாம் பாதுகாத்து கொண்டாலே போதும். நம் வாழ்க்கையில் வரக்கூடிய பல வகையான கஷ்டங்கள் குறைய தொடங்கி விடும். நம் நெற்றியில் வைக்கக்கூடிய பொருட்களின் பட்டியலில் இந்த விபூதிக்கு முதலிடம்.

விபூதியை எப்படி நம்முடைய நெற்றியில் இட்டுக்கொண்டால், விபூதியுடன் வேறு எந்த பொருட்களை சேர்த்து, கலந்து நம்முடைய நெற்றியில் இட்டுக்கொண்டால் இந்த உலகத்தில் சந்தோஷத்தை நம் வசப்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

அரசமரத்து இலையை எடுத்துக் கொள்ளுங்கள். எருக்கன் கட்டை அல்லது எருக்கன் குச்சி எது கிடைத்தாலும் சரி, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. குறிப்பாக வெள்ளருக்கன் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட கட்டை கிடைத்தால் மிகவும் சிறப்பானது. அரச மரத்தின் இலையில் மூன்று இலைகள் கிடைத்தாலே போதும். அந்த இலையை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். வெள்ளருக்கன் குச்சியை நெருப்பில் நன்றாக சுட வேண்டும்.

arasa-maram1

ஒரு மண் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து விட்டு, அந்த தீபத்தின் சுடரில் வெள்ளருக்கன் கட்டையை காண்பித்து நன்றாக சுட்டு பொசுக்கி கொள்ளுங்கள். அதிலிருந்து வரும் சாம்பலை தனியாக சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த படியாக காய்ந்த அரச மர இலையை மிக்சியில் போட்டு அல்லது இடித்து நன்றாக தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த இரண்டு பொருட்களையும் உங்கள் வீட்டில் விபூதியோடு கலந்து தினம்தோறும் நெற்றியில் அந்த ஆண்டவனை நினைத்து இட்டுக் கொள்ள வேண்டும். உங்களுடைய இஷ்ட தெய்வம் உங்களுடைய குலதெய்வம் எந்த தெய்வத்தை நினைத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலும் சரிதான். இந்த விபூதியை தீட்டு படாமல் பத்திரமாக பூஜை அறையில் தான் வைத்துக்கொள்ள வேண்டும்.

vellerukku

இதை ஒரு வசிய விபூதி என்றே சொல்லலாம். இதை நெற்றியில் இட்டுக்கொண்டு நீங்கள் வெளியே சென்றால் உங்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கும். அரசமரம் அரச வாழ்வு தரும் என்று சொல்லுவார்கள் அல்லவா? வெள்ளெருக்கன் எதிரிகளை கூட நம் வசப்படுத்த கூடியது. கெட்ட சக்தியை நம்மிடம் நெருங்க விடாது.

vibuthi

இந்த இரண்டு பொருளோடு விபூதியும் சேர்ந்திருக்கும்போது நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பல சங்கடங்கள் நம்மை விட்டு தெறித்து ஓடி விடும். சகல சவுபாக்கியம் தரக்கூடிய இந்த வசிய விபூதியை யார் வேண்டுமென்றாலும் வீட்டில் தயார் செய்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். வாழ்க்கையில் பல நன்மைகள் படிப்படியாக நடக்கத் தொடங்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -