மன அமைதியையும் நிறைவான செல்வத்தையும் தரும் மந்திரம்

saraswathi

இவ்வுலகில் மனிதர்களாகிய நாம் சிறப்பான ஒரு வாழ்க்கை வாழ நமக்கு நல்ல கல்வி, நிறைவான செல்வம், மனதிற்கு அமைதி இம்மூன்றும் அவசியம். ஆனால் அனைவருக்குமே இப்படிப்பட்ட பாக்கியங்கள் கிடைக்கின்றதா என்று கேட்டோமேயானால் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும். அப்படி வாழ்வில் ஏற்படும் பல்வேறு சூழ்நிலைகளால் மேற்கூறிய பேறுகள் அமையப் பெறாதவர்களும் அவற்றைப் பெற்று இன்புறுவதற்கான மந்திரம் தான் இந்த “தைத்திர்ய உபநிஷத்” மந்திரம்.

saraswathi

மந்திரம்:
ஓம் சஹ நாவவது
சஹ நவ் புனக்து
சஹ வீர்யம் கரவா-அவஹை
தேஜஸ்வி நவ்-அதீ-தம்-ஆஸ்து மா விட்விச்ஸ்-ஆவஹை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பொது பொருள்:
எங்களுக்கு சிறந்த அறிவாற்றலைக் கொடு, ஊக்கத்துடன் பணிபுரிய சக்தியைக் கொடு, எங்களுக்கு வரும் துன்பங்களை நீக்கி, மனிதர்களாகிய எங்கள் மனதிலுள்ள பேதங்களை நீக்கி எங்களுக்கு என்றென்றும் அமைதியை மட்டும் கொடுப்பீராக.

இம்மந்திரத்தின் கருவே நம் வாழ்வில் அணைத்து வளங்களையும் வழங்குமாறு இறைவனை வேண்டுவது தான். எனவே ஒரு நாளில் உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் தொடர்ந்து ஜெபியுங்கள். அப்படி செய்து வரும் போது உங்களுக்குள் ஒரு ஆக்கபூர்வமான சக்தி தோன்றுவதை உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே:
திருடரிகளிடம் இருந்து வீட்டை காக்க உதவும் மந்திரம்

இச்சக்தியோடு நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும், அதில் வெற்றியடைந்து உங்களுக்கு அனைத்து வகையான செல்வங்களின் சேகரம் ஏற்படும். திடசித்தத்தோடு தொடர்ந்து செய்து வரும் போது வாழ்வின் உயர்ந்த செல்வமான மன அமைதியைப் பெறுவீர்கள். இந்த மந்திரம், பெரும்பாலும் பள்ளிகளில் பிரேயர் பாடலாக இருப்பதை நாம் கண்டிருப்போம். இந்த மந்திரத்தை ஜெபிக்கும் குழந்தைகளிடத்தில் ஒற்றுமையும் அறிவாற்றலும் பெருகும்.