திருடர்களிடம் இருந்து வீட்டை காக்க உதவும் மந்திரம்

amman-1-2

இன்றைய காலகட்டதில் சுமாரான வாழ்க்கையை வாழ்வதற்கு கூட குடும்பத்திலுள்ள ஆண்களும், பெண்களும் கடுமையாக உழைக்க வேண்டியள்ளது. அப்படி கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தையும், பொருட்களையும் நமது உயிரைக் காப்பது போல் கட்டி காக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் நாட்டில் அதிகரித்து வரும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் உழைத்து உண்ண விருப்பமின்றி, திருட்டு, கொள்ளை போன்றவற்றை செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இப்படி பட்டவர்களிடம் இருந்து நமது பொருட்கள் களவு போகாமல் இருக்க ஒரு மந்த்ரியம் உதவுகிறது. அது தான் ப்ரம்மவித்வேஷிணி மந்திரம்.

amman

மந்திரம் :
“ஓம் ப்ரம்மவித்வேஷிணி ஷிவே ரக்ஷ் ரக்ஷ் தஹ் தஹ்”.

பொது பொருள் :

எல்லாம் வல்ல ப்ரம்மவித்வேஷிணி தேவி, என்னை எல்லா விதமான துன்பங்களிலிருந்தும் காத்தருள்.

இதையும் படிக்கலாமே:
சித்து விளையாட்டுக்களை செய்ய உதவும் எளிய மந்திரம்

இம்மந்திரத்தை உங்களுக்கு திருட்டு பயம் ஏற்படும் போதோ, வீட்டை பூட்டி விட்டு நீண்ட நாட்கள் வெளியே செல்லும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் 108 முறை ஜெபிக்க வேண்டும். மேலும் சூரிய, சந்திர கிரகணங்களின் போது 1000 முறையோ, 10000 முறையோ ஜெபித்து உரு ஏற்றிக்கொண்டால் மிகச்சிறந்த பலன் ஏற்படும். இதன் பயனாக, திருடர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை களவாட நினைத்தாலும் அவர்களின் எண்ணமானது மாறும்.