நமக்கு அன்றாடம் பல வகையான சகுனங்கள் உணர்த்தும் பலன்கள் என்ன தெரியுமா?

sagunam

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் மனிதர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதை விஞ்ஞானிகளும் மறுப்பதில்லை. இதை இறை நம்பிக்கை உள்ளவர்கள் கடவுள் என்று கருதி வழிபடுகின்றனர். நாம் செய்கின்ற எந்த ஒரு செயலும் இந்த பிரபஞ்ச சக்தியின் கட்டுப்பாட்டுக்குள்ளாகவே இருக்கிறது. அத்தகைய செயல்களில் ஈடுபடும் போது அவற்றின் முடிவு எப்படி இருக்கும் என்பதையும் சில அறிகுறிகள் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. இதைத்தான் ஜோதிட சாஸ்திரத்தில் சகுனங்கள் என்கின்றனர். சகுனங்கள் என்றால் என்ன என்பதையும், எத்தகைய சகுனங்களால் என்னென்ன பலன்கள் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Nakshatra

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி எந்த ஒரு ஜாதகத்திலும் கால புருஷனின் லக்னம் மேஷம் ராசியாக இருக்கிறது. அந்த மேஷ ராசிக்கு ஏழாம் வீடு துலாம் ராசியாகும். இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் பகவான் ஆவார். இந்த இரண்டு ராசிகளும் ஒன்றுக்கொன்று ஏழாம் வீடாக வருவதால் சுபத்தன்மை நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது. ஆகவே, சுக்கிரனின் காரகத்துவம் உள்ள பொருட்களெல்லாம் சுபத்தன்மை நிறைந்தவை. அதே போல் கால புருஷனின் பாதகாதிபதியாக சனி பகவான் இருக்கிறார். ஆகவே, அவர் சம்பந்தப்பட்ட பொருட்களெல்லாம் அசுபத்தன்மை நிறைந்தவையாக கருதப்படுகிறது. அதே போல் சூரிய – சந்திரருக்கு ராகு, கேது பகை கிரகங்கள் ஆவதால் அவை அசுப தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது.

நமது ஜோதிட சாஸ்திரங்களில் சுப சகுனங்களாக வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, பட்டத்து யானை அல்லது கோயில் யானை இவைகளைப் பார்ப்பதும், இவைகளின் ஒலிகளைக் கேட்பதும் சிறந்த நற்சகுனங்களாக கூறப்படுகிறது. மேலும் அழகிய பெண்கள், நாட்டியப் பெண்கள், தயிர், இரட்டை பிராமணர்கள், மஞ்சள் கலந்த அரிசி(அட்சதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன்,ஆலய மணி ஓசை, விளக்கு, தாமரைப் பூ, நாய் தன் உடலை சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, பசு மாடுகள் இவைகளைக் காண்பது சுப சகுனமாகும்.

cow shed

அசுப சகுனங்களாக அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை, ஒற்றைத் தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையைக் காண்பது, சத்தமிடல், எண்ணெய்க் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது, தன் நட்சத்திரத்துக்கு உரிய பட்சி இடமிருந்து வலமாகச் செல்வது , விருட்சம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாகக் கேட்பது, எருமை மாடு தென்படுவது ஆகியவை கருதப்படுகின்றன. பறவைகள் கூட்டமாகப் பறந்தால், சுப சகுனமாகவும், அவை கத்திக் கொண்டே பறந்தால் அபசகுனமாகவும் ஆகிறது.

- Advertisement -

buffalo

சகுனங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், சென்ற காரியம் சிறப்பான முறையில் வெற்றியடைந்தால் அது குறித்து நாம் அதிகம் வருந்துவதில்லை. அதே நேரம் அக்காரியங்கள் தோல்வியில் முடியும் போது மட்டுமே சகுனங்கள் குறித்த ஆராய்ச்சியில் பலர் ஈடுபடுகின்றனர். சகுனங்களால் எந்தச் செயலும் கெடுவதில்லை. வெற்றியோ, தோல்வியோ அவற்றின் அறிகுறிதான் சகுனம் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

vinayagar

எந்தக் காரியத்தைத் தொடங்கும் போதும் இறைவனை வணங்கி தொடங்குவது சிறப்பு. ஒருவேளை அக்காரியம் தோல்வியில் முடிந்தாலும் இறைவன் திருஉளப்படி நடக்கும் போது நடக்கட்டும் என இருந்து மனதை தேற்றி கொண்டு அடுத்த செயலில் ஈடுபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன யோகம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Saguna palangal in Tamil. It is also called as Sagunangal tharum palangal in Tamil or Jothida palangal in Tamil or Suba sagunangal in Tamil or Saguna jothidam in Tamil.