உங்களுக்கு ஆபத்து வர இருப்பதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்! இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருந்தால் எச்சரிக்கையாக இருக்கலாமே!

dream-eman

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட்டது என்று கூறக் கேட்டிருப்போம். இந்த பழமொழி நம்மை நெருங்கிய ஆபத்து ஒன்றும் செய்யாமல் அப்படியே நீங்கி விட்டது என்பதை உணர்த்துகிறது. இப்படி நம்மை நெருங்கி வரும் ஆபத்துகளை இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு உணர்த்துவதாக சகுண சாஸ்திரம் குறிப்பிடுகிறது. நாம் செய்த நல்ல கர்ம வினைப்படி நமக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துகளை கூட நாம் செய்த புண்ணியத்தின் அடிப்படையில் நம்மை விட்டு நீங்க செய்துவிடும். அப்படியான அறிகுறிகளில் சகுன சாஸ்திரம் கூறும் முக்கியக் குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

lizard

சகுன சாஸ்திரத்தின்படி கௌலி சத்தமிடுவது முக்கிய குறிப்பாக குறிப்பிடுகிறது. சாதாரணமாக எல்லோருடைய வீட்டிலும் பல்லி சத்தம் போடும் பொழுது அந்த சமயத்தில் நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயம் வெற்றி அடையும் என்பது அதன் பலனாக இருக்கும். ஆனால் தொடர்ந்து ஒருவருடைய வீட்டில் பல்லி சத்தம் போட்டுக் கொண்டே இருந்தால் அது நல்ல சகுனம் அல்ல. வீட்டிலும் சரி, கோவில்களில் நாம் அமர்ந்திருக்கும் பொழுதும் சரி, பல்லி சத்தம் நமக்கு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் நம்முடைய பிரார்த்தனை ஒன்றில் தடை ஏற்பட இருப்பதைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு விஷயம் நடக்க வேண்டி பிரார்த்தனையில் இருக்கலாம், அந்த விஷயம் நடைபெறுவதில் சிக்கல்கள் உள்ளது என்பதை இந்த அறிகுறி உங்களை எச்சரிக்கிறது.

ஒருவர் இறக்கப் போகிறார் என்றால் அவர்களுக்கு ஏதாவது ஒரு அறிகுறியின் மூலம் அதை முன்கூட்டியே எமதர்மன் தெரிவிப்பார் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. உதாரணத்திற்கு அவர்களுக்கு முன்கூட்டியே அபசகுனமான கனவுகள் வரலாம். மாடு முட்டுவது, பாம்பு கடிப்பது போன்ற கனவுகள் நம் உயிருக்கு ஆபத்து இருப்பதை குறிப்பால் உணர்த்துவதாக குறிப்பிடுகிறது.

Dream

பந்தல் போல் படரும் கொடி வகையான காய்கறி வகைகளை கனவில் காண்பது அவ்வளவு நல்லதல்ல. கீரை, காய்கறிகள் கனவில் வந்தால் அது சொர்கலோக வாசத்தை குறிக்கிறது. இந்த வகையான கனவுகள் உங்களுக்கு ஏற்படும் பொழுது முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது. அதாவது இது போன்ற கனவுகள் அல்லது அறிகுறிகள் உங்களுக்கு தென்படும் பொழுது யம பயத்தை நீக்கக் கூடிய சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் கால பைரவரை வழிபடலாம்.

- Advertisement -

ஒருவருக்கு ஆபத்து நேர இருப்பதை உணராமலேயே இருந்தால் அது அவருடைய கர்மவினை. அறிகுறிகளால் நீங்கள் முன்கூட்டியே உங்களுடைய ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து தப்பிக்கும் வழியையும் கடவுள் உங்களுக்கு காண்பித்தால் அதுவும் நீங்கள் செய்த நல்ல கர்ம வினைகளில் அடிப்படையில் தான் நடக்கிறது என்பதை உணர வேண்டும்.

cat

நாய், பூனை, பசு, கன்று என்று நாம் செல்லமாக வளர்க்கும் வளர்ப்பு பிராணிகள் கனவில் வரும் பொழுது அது முன் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டு வளர்ப்புப் பிராணிகள் கனவில் வந்தால் அது வீண் விரயங்கள் ஏற்பட இருப்பதை குறிப்பால் உணர்த்துகிறது என்று அர்த்தமாகிறது. பூனை குறுக்கே வருவது நிஜத்தில் தோல்வியை குறித்தாலும், கனவில் இது போல் உங்களுக்கு வந்தால் வீண் விரயத்தை குறிக்கிறது. மருத்துவ செலவுகள், திருட்டு போன்ற அசுப செலவுகள் ஏற்பட இருப்பதை இந்த அறிகுறிகளை உணர்த்துகிறது.

dead-death

பொதுவாக நமக்கு யாராவது மரணிப்பது போன்ற கனவு வந்தால் அதை சுபசகுனமாக எடுத்துக் கொள்ளலாம். மரணத்தைக் கனவில் கண்டால் அவர்களுடைய சொந்த பந்தங்களில் யாருக்காவது திருமணம் நடைபெற இருப்பதை குறிப்பதாக அர்த்தமாகிறது. இது போல் சில குறிப்புகள் நம்மை அறியாமலேயே நமக்கு நடக்க இருக்கும் ஆபத்தை முன் கூட்டியே நமக்கு தெரிவிப்பதாக சகுன சாஸ்திரம் குறிப்பிடுகிறது. வர இருக்கும் ஆபத்தை உணர்த்தும் அதே கடவுள், அதை தடுக்கவும் செய்து விடுவார் என்பதால் நாம் எந்தவிதமான பயமும் கொள்ளத் தேவையில்லை. கால பைரவரையும் அவரின் சொரூபமாக இருக்கும் ஈசனையும் திங்கள் கிழமைகளில் வழிபட நல்லதே நடக்கும்.

இதையும் படிக்கலாமே
ருத்ராட்சம் அணிவதற்கான விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் ருத்ராட்சம் அணியலாம்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.