சாஸ்திர ரீதியாக ஒரு சில பொருட்கள் நம் வீட்டில் கீழே தவறி சிந்திவிட்டால், அதற்கு பலன்கள் சொல்லப்படுவது உண்டு. உதாரணத்திற்கு குங்குமம் கீழே சிந்திவிட்டால் அபசகுனம் என்பார்கள். ஏதோ ஒரு கெட்ட விஷயம் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிகுறியாக குறிப்பதாக நம் முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் இந்த பொருட்கள் கீழே சிந்தினால் நல்ல காலம் பிறக்குமாம். அப்படியான சில பொருட்களை பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இப்பதிவில் பகிர்ந்து கொள்ள போகிறோம்.
குங்குமம் கீழே சிந்துவது என்பது அபசகுனமாக கருதப்படுவது உண்டு ஆனால் அதே மஞ்சள் சிந்தினால், வெற்றிக்கு நெருக்கமாக வந்துவிட்டதாக அர்த்தமாம். திருமண சுபகாரியங்கள் கைக்கூடி வருவதாக அர்த்தம். அதுமட்டுமல்லாமல் மஞ்சள் சிந்துவது, மேன்மையை உண்டாக்கும். கைத்தவறி தெரியாமல் மஞ்சள் கீழே தவற விட்டாலும் நற்பலன்கள் ஏராளம் உண்டு. இதுவரை கஷ்ட நிலை இருந்திருந்தாலும், இனி எதிர்காலம் நல்ல நிகழ்வுகளை கொடுக்கக் கூடியதாக அமையும் என்பது பலனாகும்.
பூக்கள் சிதறுவது, தெரியாமல் பூக்களை கீழே தவற விடுவது போன்ற விஷயங்கள் நடந்தால் அது சுப சகுனமாக கருதப்படுகிறது. நாம் பிரார்த்தனை செய்யும் பொழுது பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பூக்கள் கீழே விழுந்தால் இறைவன் ஆசீர்வதிப்பதாக அர்த்தம் கொள்கிறோம். அதே போல தான் பூக்கள் எப்போது கீழே சிந்தினாலும், கை தவறி விழுந்தாலும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வரப்போவதாக அர்த்தம். குடும்பத்தில் சுப செலவுகள் வரும்.
அதிகாலையில் கோலம் போடும் பொழுது கோல பொடி கீழே சிந்தினால் அதுவும் சுப சகுனமாகும். கோல பொடி கீழே தவிற விடுவது, சிந்துவது இது போன்ற நிகழ்வுகள் நடந்தால், ஆசீர்வதிக்க கூடிய நல்ல தேவதைகளின் வருகை நிகழ்ந்திருக்கிறது. இனி வாழ்க்கையில் நல்ல காலம் வர இருக்கிறது என்று அர்த்தம்.
சிந்தக்கூடாத சில பொருட்களும் உண்டு. வீட்டில் அரிசி, உப்பு, கடுகு, எண்ணெய், நெல்மணிகள், பால் போன்ற பொருட்கள் எப்போதும் சிந்தக்கூடாது. இந்த பொருட்கள் எல்லாம் கீழே தெரியாமல் சிந்தினால் அது அபசகுனமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அரிசியை கீழே சிந்தவிடுவது அசம்பாவிதங்களை முன்கூட்டியே அறிவுறுத்தக் கூடியது. வீட்டில் ஏதோ ஒரு கெட்ட காரியம் நடக்க காத்திருக்கிறது. மேலும் அரிசியை தவற விடுவது நற்காரியங்களில் தடைகளை ஏற்படுத்தும்.
இதையும் படிக்கலாமே:
நோய் தீர சிவன் கோவில் தானம்
உப்பு கீழே தவறவிட்டால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவீர்கள். நிதிநிலை மோசமாகும். வீண் செலவுகள் அதிகரிக்கும். கடுகு கீழே தவறவிட்டால் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். சூழ்ச்சிகளால் வஞ்சிக்கப்படுவீர்கள் என்பதை முன்கூட்டியே அறிவுறுத்துகிறது. பால் கீழே சிந்திவிட்டால் மன அமைதி சீர்குலையும். நீங்கள் தீட்டிய திட்டங்களில் தடைகளும், தடங்கல்களும் வரும். எடுக்கும் முடிவுகளில் தடுமாற்றம் உண்டாகும். நெல்மணிகள் கீழே தவற விட்டுவிட்டால், பண பற்றாக்குறை ஏற்படும். கடன் தொல்லைகள் அதிகரிக்கும். வரக்கூடிய விரயங்கள் சுப விரயமாக இருக்காது. அசுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டிய நிலைமை வரும். இப்பொருட்களை கையாளும் பொழுது, கவனமாக இருக்க வேண்டும். தெய்வ அம்சம் நிறைந்துள்ள இப்பொருட்களை கையில் வைத்துக் கொண்டு, தேவையில்லாத விஷயங்களை செய்யக்கூடாது.