வெற்றியை தேடித் தரும் சாய் பாபா மகா மந்திரம்

Sai-baba-mantra

இந்த பூவுலகில் மனித உருவெடுத்து வந்த மகானாக வணங்கப்படுகிறார் சீரடி சாய் பாபா. மதங்களை கடந்த ஒரே கடவுளாக இன்றும் மக்களிடையே நிலைத்திருக்கும் இவரை வாங்கினால் அருளாசி நிச்சயம். கலியுத்தின் கண் கண்ட தெய்வமாக இருந்து இன்றும் பல பக்தர்களுக்கு இவர் காட்சி தந்து அருள்புரிகிறார். இப்படி பக்தர்களை தன் இமைபோல காக்கும் சாய் பாபாவை வணங்கி, சாய் பாபா மகா மந்திரம் அதை ஜெபிப்போர்க்கும் வெற்றி நிச்சயம்.

Sai baba tamil song

சாய் பாபா மகா மந்திரம்:
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

மந்திரத்தின் பொது பொருள்:
ஓம் – உலகில் உள்ள விஞ்ஞானிகள் பலரால் ஏற்கப்பட்ட உலகின் மூல ஓசை தான் ஓம். கரடு முரடான மனம் கொண்டவரை கூட ஆழ்நிலை தியானத்திற்கு அழைத்துச்செல்லக்கூடிய ஒரே மூல மந்திரம் ஓம்.

ஸ்ரீ – ஸ்ரீ என்ற சொல்லுக்கு திரு என்ற பொருளும் உண்டு. தெய்வீக சக்தி பெற்ற ஒரு அறிய சொல் ஸ்ரீ

ஜெய ஜெய – வெற்றியை குறிக்கும் ஜெயம் என்ற சொல்லின் சுருக்கமே ஜெய.

- Advertisement -

சாயி – அர்த்தமற்ற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஒரு அற்புத மகான். ஞானத்தின் ஒளி. உலக பொதுக்கடவுள். இப்படி என்னிடலங்க பல அர்த்தங்களை கொண்டு ஒரு அற்புத சொல் சாயி.

நாம் ஒரு வேண்டுதலை சாய் பாபாவிடம் வைத்து மேலே உள்ள சாய் பாபா மந்திரம் அதை தொடர்ந்து தினமும் 108 முறை ஜபித்து வர அந்த வேண்டுதல் நிறைவேறும். தினம் தோறும் ஜபிக்க முடியாதவர்கள் வியாழக்கிழமைகளில் ஜபிக்கலாம். வெகு சிலருக்கு வேண்டுதல் நிறைவேறாமல் போகும். இதற்க்கு காரணம் அந்த வேண்டுதலை காட்டிலும் ஒரு பெரிய பரிசை சாய் பாபா தரவிருக்கிறார் என்பதே. ஆகையால் விடா முயற்சியோடு சாய் பாபா மகா மந்திரம் அதை ஜபித்து பயன் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ஷீரடி சாய் பாபா மூல மந்திரம்

English Overview:
Here we have Sai baba Maha mantra in Tamil. One can chant Sai baba mantra to get success in life. Above Sai baba Mantra in Tamil language. This mantra needs to be chanted 108 each day or at least this needs to be chanted on Thursday.