சாய் பாபாவின் சிலை பூ மாலையை தானாக கழற்றிய அதிசயம் – வீடியோ

Sai baba

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே தனக்கு மிஞ்சிய சக்தி இப்பிரபஞ்சத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் அதை இயற்கையின் ஆற்றல் என்றும் இறை பக்தர்கள் அதை கடவுளின் அருள் என்றும் கூறுவர். அப்படி கடவுளின் தூதுவர்களாக பூமியில் அவதரிப்பவர்கள் தான் மகான்கள். அப்படியான இறையம்சம் கொண்டவரான “ஸ்ரீ ஷீரடி சாய் பாபா” தான் வாழும் காலத்திலும், வாழ்ந்து முடிந்த பிறகும் தன் பக்தர்களுக்கு, தனது இருப்பை பலவகையில் தெரியப்படுத்தியிருக்கிறார். அப்படியான ஒரு காணொளி தான் இது.

சாய் பாபா கதைகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சென்னை தாம்பரம் அருகேயிருக்கும் மப்பேட்டில் அமைந்திருக்கிறது இந்த சாய் பாபா கோவில். தினமும் பல சாய் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் இக்கோவிலில் பாபா சிலை இருக்கும் கருவறையில் உள்ள சிசி டிவி கேமராவில் பதிவாகியுள்ள ஒரு காட்சி, சாய் பாபாவின் “சாந்நித்யம்”அங்கே இருப்பதற்கான சாட்சியாக உள்ளது.

அந்த சிசி டிவி கேமராவில் பதிவான காட்சியை காணும் போது, அதில் சாய் பாபாவின் சிலைக்கு பூஜையின் போது சாற்றப்பட்ட பூமாலையை
அவர் கழட்டி கிழ தள்ளுவது போலவும், அப்படி விழுந்த அந்த மாலை அவர் காலில் மாட்டும் போது, அவர் தன் காலால் அம்மாலையை தள்ளியதும், அது அவர் அமர்ந்திருக்கும் பீடத்தை சுற்றி அழகாக அலங்கரிப்பது போன்ற காட்சி உள்ளது.

இக்காட்சியைக் கண்ட சாயியின் பக்தர்கள் அவரின் அருளாற்றல் இக்கோவிலில் இருப்பதை எண்ணி மகிழ்கின்றனர். இவ்வதிசயத்தைப் பற்றி கேள்விப்பட்டு மேலும் பலர் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.