இந்த சுலோகம் சொல்லி தியானம் செய்தால் சாய் பாபாவின் அருள் கிடைக்கும்

Sai-baba-tamil-song5-1

தன்னை நாடி வருபவர்கள் அனைவருக்கும் அருள் மழையை பொழிந்து கலியுக கடவுளாகவும் கண் கண்ட தெய்வமாகவும் இருக்கிறார் சாய் பாபா. இவர் நாமத்தையும் மந்திரங்களையும் ஜபித்து வழிபடுவோர் பலருக்கு இவர் நேரில் வந்து காட்சி கொடுப்பதாக கூறப்படுகிறது. அதிசயங்கள் பல நிகழ்த்தும் சாய் பாபாவின் அருளை பெற கீழே உள்ள சாய் பாபா மந்திரம் அதை ஜபித்து தியானம் இருந்தால் சாய் பாபாவின் அருளை நிச்சயம் பெறலாம்.

Sai baba tamil song

ஷீரடி சாயிபாபா தியான ஸ்லோகம்
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி

இந்த தியான மந்திரத்தை ஜபித்தவாறு தினமும் தியானம் இருப்பது நல்லது. தினமும் தியானம் இருக்க முடியாதவர்கள் வியாழ கிழமைகளில் தியானம் இருக்கலாம். வியாழ கிழமை என்பது சாய் பாபாவிற்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் பலர் விரதம் இருந்து சாய் பாபா கோயிலிற்கு சென்று சாய் பாபாவை வழிபடுவது வழக்கம். பெரும்பாலான சாய் பாபா கோவில்களில் வியாழ கிழமைகளில் அன்னதான வழங்குவது ஏழைகளுக்கு உதவுவது போன்ற பல நல்ல காரியங்கள் நடைபெறுவதும் வழக்கம். ஷீரடி சாய் நாதனை போற்றுவோம் அவர் அருளால் இன்புற்று வாழுவோம்.

இதையும் படிக்கலாமே:
ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க உதவும் சாய் பாபா மந்திரம்

English Overview:
Here we have given Shirdi Sai baba dhyan mantra in Tamil. This mantra needs to be chanted during meditation. Especially this needs to be chanted on Thursday to get Sai baba’s grace.