வீடே மணக்கும் இந்த சைவ குழம்பை ஒரு முறை செய்து சாப்ட்டு பாருங்க, கறி குழம்புக்கும் இதுக்கும் வித்தியாசாயமே தெரியாது. சூப்பரான அசைவ சுவையில் சைவ கறி குழம்பு செய்வது எப்படின்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

- Advertisement -

எப்போதும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அசைவம் சேர்க்காமல் சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டம் தான். அதற்காக தினமும் அசைவம் செய்ய முடியாது இல்லையா? இது போன்ற நேரத்தில் சைவ குழம்பை அசைவ சுவையில் இப்படி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள். நமக்கும் என்ன செய்வது என்று குழப்பம் இல்லாமல், அவர்களுக்கு பிடித்த சமையலை செய்து கொடுத்த திருப்தியும் இருக்கும். வாங்க இந்த சைவக் கறி குழம்பை எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

முழு தனியா -1 ஸ்பூன், சீரகம் – 2 ஸ்பூன், கடலை பருப்பு -1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 5, சோம்பு – 1 ஸ்பூன், பட்டை – 1,நட்சத்திர பூ – 1, பூண்டு தோல் உரித்தது – 5 பல், பெரிய சைஸ் வெங்காயம் – 1 ( நறுக்கியது) , தனியா தூள் – 1 ஸ்பூன், மிளகாய் தூள் -2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – 1கொத்து.

- Advertisement -

செய்முறை

இந்த குழம்பிற்கு தேவையான மசாலாவை முதலில் அரைத்துக் கொள்வோம். அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து எண்ணெய் ஊற்றிக் சூடானதும், அதில் சீரகம், சோம்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் அனைத்தையும் சேர்த்து லேசாக நிறம் மாறாமல் வறுத்து எடுத்து தனியே ஒரு தட்டில் எடுத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து மறுபடியும் அடுப்பில் அதே பேனை வைத்து இன்னும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் போட்டு வதக்கிய பிறகு, அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு, அதையும் தனியே எடுத்து ஆற வைத்து விடுங்கள்.

- Advertisement -

அரைத்த மசாலாகள் எல்லாம் நன்றாக அறிய பிறகு, முதலில் வறுத்து வைத்த மசாலாவையும் அடுத்து வதக்கிய வெங்காயம், தக்காளி விழுதையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசான பதத்தில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கரை வைத்துக் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை நட்சத்திர பூ, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு பொரித்தவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டையும் சேர்த்துக் நன்றாக வதங்கிய பிறகு தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு இவைகளை சேர்த்து ஒரு முறை வதக்கிய பிறகு, அரைத்து வைத்த மசாலா விழுதை இதில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மூடி வைத்து குழம்பை கொதிக்க விடுங்கள். இந்த குழம்பு சற்று கெட்டியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: அசத்தலான சுவையில் ஐந்தே நிமிடத்தில் வேர்க்கடலை சட்னி அரைப்பது எப்படி? இப்படி செஞ்சா ஹோட்டல் சட்னி கூட தோத்து போயிடுமே!

பத்து நிமிடத்தில் குழம்பு நன்றாக கொதித்து விடும். அதில் சேர்த்திருக்கும் அனைத்தையும் ஏற்கனவே வதக்கி அரைத்து இருப்பதால், அதிக நேரம் கொதிக்க வேண்டிய அவசியம் இல்லை. குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் குழம்பை அணைத்து விடுங்கள். சுட சுட சத்தம் வைத்து இந்த குழம்பை ஊற்றி சாப்பிட்டு பாருங்கள், கறிகுழம்பிற்கும் இதற்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே தெரியாது. சொல்லப் போனால் சுவையில் கறிக் குழம்பையே மிஞ்சி விடும்.

- Advertisement -