அசத்தலான சுவையில் 5 நிமிடத்தில் வேர்க்கடலை சட்னி அரைப்பது எப்படி? இப்படி செஞ்சா ஹோட்டல் சட்னி கூட தோத்து போய்டும்

verkadalai-peanut-chutney1_tamil
- Advertisement -

வேர்கடலை சட்னி | Verkadalai chutney recipe in Tamil

சதா ஒரே விதமான முறையில் சட்னி அரைத்து போரடித்து போனவர்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் சட்னி அரைக்க தெரிந்தால் ரொம்பவே விரும்பி சமைக்கவும், சாப்பிடவும் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் அசத்தலான சுவையில் இந்த முறையில் ஒரு முறை வேர்க்கடலை சட்னி செஞ்சு பாருங்க, நீங்களே ரசித்து சாப்பிடுவீங்க! வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த வேர்க்கடலை சட்னி ரெசிபியை எப்படி செய்வது? என்பதை தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – இரண்டு, பூண்டு பல் – 4, கொத்தமல்லி தழை – அரை கைப்பிடி, புதினா இலைகள் – அரை கைப்பிடி, நறுக்கிய தேங்காய் சில்லுகள் – அரை கப், வறுத்த வேர்க்கடலை – கால் கப், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான வேர்க்கடலையை சேர்த்து வெறுமனே நன்கு சூடு பறக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த இந்த வேர்க்கடலைக்கு மேல் தோல் லேசாக கைகளால் நீங்கள் தேய்த்தாலே உரிந்து வந்துவிடும். அதன் பிறகு ஊதி விட்டு விடுங்கள் பறந்து விடும். இப்போது அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். இதனுடன் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களையும் சேர்த்து வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்கு வறுபட்டதும் அரை கைப்பிடி அளவிற்கு புதினா மற்றும் மல்லி தழைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து சேர்க்க வேண்டும். ஏதாவது ஒரு இலை இல்லை என்றால் அதற்கு பதிலாக ஒரு கைப்பிடிக்கு மற்றொரு இலையை கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் வெட்டி வைத்துள்ள தேங்காய் துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுத்தால் அவ்வளவு சூப்பராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
இனி உங்க தலையில் ஒரு நரைமுடி கூட இருக்கவே இருக்காது. என்னனா நீங்க வீட்டில் வேண்டாம்ன்னு தூக்கி போடுற இந்த பொருளை வைச்சு கொஞ்சம் கூட செலவே இல்லாம முடியை கருக்கருன்னு மாத்தலாம் தெரியுமா?

தாளிக்க அதே பேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு வரமிளகாயை காம்பு நீக்கி இரண்டாக உடைத்து சேருங்கள். அவ்வளவுதான், இப்போது லேசாக வறுத்து அடுப்பை அணைத்து தாளிப்பை சட்னியில் கொட்டி கலந்து வைத்தால், சுவையான மற்றும் சுலபமான வேர்க்கடலை சட்னி தயார்! இதே மாதிரி நீங்களும் சூப்பரான சட்னி ரெசிபி ஒன்றை செய்து பாருங்கள், இரண்டு இட்லி சாப்பிடும் இடத்தில், நாலு இட்லி கூட சாப்பிடலாம்.

- Advertisement -