வாழ்க்கையில் வரக்கூடிய பல தடைகள் தவிடு பொடி ஆகவேண்டுமா? விஜயதசமி தினமான இன்று, கட்டாயம் எல்லோராலும் உச்சரிக்கப்பட வேண்டிய 4 வரிபாடல் உங்களுக்காக!

saraswathi
- Advertisement -

வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு, பல பிரச்சினைகள் வரும், பல தடைகள் வரும். எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து விட்டு, முயற்சிசெய்து முன்னோக்கி சென்றால்தான் வாழ்க்கையில் வெற்றி என்ற ஒன்றை அடைய முடியும். அந்த வெற்றிக்கனியை பறிப்பதற்கு நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளோடு சேர்த்து, சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதமும் நமக்கு தேவை. விஜயதசமி தினமான இன்று இந்தப் பாடலை உச்சரிப்பவரது வாழ்க்கையில் ‘ஜெயம்’ நிச்சயம் உண்டு. சோம்பேறித்தனம் இல்லாத, சுறுசுறுப்பான படிப்படியான முன்னேற்றத்தை வாழ்க்கையில் கொண்டுவர வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? எந்த பாடலை உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

saraswathi11

குமரகுருபரர் நமக்காக விட்டு சென்ற, சகலகலா வல்லி மாலை பாடலைத் தான் இந்த விஜயதசமி தினத்தில் நாம் உச்சரிக்க வேண்டும்.  சகலகலாவல்லி மாலையில் மொத்தமாக 10 பாடல்களை நமக்காக தந்திருக்கின்றார் குமரகுருபரர். இந்த 10 பாடலையும் உச்சரிக்க முடியாதவர்கள் கூட, இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள பத்தாவது பாடலை, கடைசி பாடலை, கடைசி நான்கு வரிகளை உச்சரித்தால் கூட போதும்.

- Advertisement -

உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான தடைகள் தகற்தெரியப்படும். அதாவது சில பேருக்கு நல்ல படிப்பறிவு இருக்கும். ஆனால் அனுபவரீதியாக என்ன செய்து, வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற சிந்தனையை சிந்திக்க தெரியாது. சில பேருக்கு படிப்பறிவே இருக்காது. ஆனால், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு என்ன வழியைத் தேடிக் கொள்ளவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

saraswathi 2

இப்படியாக உங்களுக்கு என்ன தேவைப்படுகிறது? நல்ல அறிவாற்றலும் படிப்பறிவும் தேவைப்படுகிறதா அல்லது அனுபவரீதியாக உங்களது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா? ஆனால் ‘படிப்பறிவோடு சேர்ந்த திறமையான புத்திசாலித்தனம் ஒருவருக்கு அவசியம் தேவை’. எதுவாக இருந்தாலும் சரி, கண்கண்ட தெய்வம் சரஸ்வதி தேவியை நினைத்து எப்படியாவது பின் சொல்லப்பட்டுள்ள இந்த பாடலை ஒரு முறையாவது உச்சரித்து விடுங்கள். உங்களுக்காக சகலகலாவல்லி மாலை கடைசி பாடல் இதோ!

- Advertisement -

மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்

பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்

- Advertisement -

விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே

saraswathi

இந்தப் பாடலை உச்சரித்தவர்கள் வாழ்க்கையில் தோற்றுப் போனதாக சரித்திரமே இல்லை. அதுவும், குறிப்பாக இந்த விஜயதசமி தினத்தில், இந்தப்பாடலை படிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்ததே, பெரிய வரம் தான். முடிந்தால் உங்களுடைய குழந்தைகளுக்கு இந்தப் பாடலை சொல்லிக் கொடுத்து, தினந்தோறும் உச்சரிக்க செய்வது மேலும் சிறப்பு. குமரகுருபரர் இந்தப் பாடலை பாடிதான், சரஸ்வதி தேவியின் அருள் ஆசி பெற்று, பல சாதனைகளை புரிந்துள்ளார் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நாளை விஜயதசமி! இந்த ஒரு செயலை செய்ய மறந்துடாதீங்க! பணம் பல மடங்கு பெருக, உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றத்தை கொண்டுவர, இந்த நாளை தவற மட்டும் விட்டுடாதீங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -