நாளை விஜயதசமி! இந்த ஒரு செயலை செய்ய மறந்துடாதீங்க! பணம் பல மடங்கு பெருக, உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றத்தை கொண்டுவர, இந்த நாளை தவற மட்டும் விட்டுடாதீங்க.

- Advertisement -

இன்றைய தினம் ஆயுத பூஜை! வழிபாட்டை நம்முடைய வீட்டில், குடும்பத்தோடு சேர்ந்து சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடி முடித்து இருப்போம். மனநிறைவோடு இருக்கும் இந்த சமயத்தில், நாளை வரக்கூடிய விஜயதசமி அன்று, நாம் எந்த ஒரு செயலை தொடங்கினாலும், அது நமக்கு பல மடங்கு வெற்றியைத் தேடித்தரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. குறிப்பிட்ட இந்த விஜயதசமி தினத்தன்று, புதியதாக தொழில் தான் தொடங்க வேண்டுமா? புதியதாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டுமா?

saraswathi11

இதோடு சேர்த்து இன்னும் சில நல்ல காரியங்களையும் நாம் தொடங்கலாம். அது எப்படி? இந்த விஜயதசமி தினத்தில் நாம் தொடங்கக்கூடிய தொழிலும், கல்வியும், எப்படி சிறப்பாக நடக்குமோ, இதேபோல் தான் நாம் பணத்தை சேகரிப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகளும் பலமடங்கு பெருகும். அது எப்படி என்கின்ற சூட்சமத்தை இந்த பதிவின் மூலம், இந்த நல்ல நாளில் நாமும் தெரிந்துகொள்வோமா?

- Advertisement -

சரிங்க, நேரடியாக டிப்ஸ்கே போயிடலாம். நாளைய தினம் அதாவது விஜயதசமி அன்று, முடிந்தால் குபேரரது சிலைவடிவில், இருக்கக் கூடிய ஒரு புதிய உண்டியலை வாங்கி, அதில் காசு பணத்தை சேர்க்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். இல்லை என்றால், உங்களுடைய வீட்டில் காசு சேமிப்பதற்காக ஏதாவது ஒரு டப்பா இருக்கும் அல்லவா? அதில் புதியதாக உங்கள் கையால் சேமிப்பின் முதல் ஆரம்பமாக இன்று, சேமிப்பை தொடருங்கள். உங்களால் எவ்வளவு ரூபாய் முடியுமோ 11 ரூபாய், 21 ஒரு ரூபாய், 101 ரூபாய். இந்த பணம் என்பது உங்களுடைய சேமிப்பின் முதல்கட்ட தொகை.

durga-amma

எப்படியாவது அடுத்த வருடத்திற்குள் இவ்வளவு குறிப்பிட்ட தொகையை சேர்க்க வேண்டும் என்ற உறுதி மொழியையும் இந்த தினத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எடுக்கக்கூடிய இந்த சிறிய முயற்சி, நிச்சயம் வெற்றியில் போய் முடியும். இது உங்களுடைய சேமிப்புக்கான வழி. இதுநாள் வரை சேமிக்கவே முடியாதவர்கள் கூட, இந்த தினத்தில் சேமிப்பை தொடங்கினால், நிச்சயம் அவர்களது கையில் காசு சேரும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் தன தானியத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டுமென்றால், அரிசி, பருப்பு, உப்பு போன்ற பொருட்களை சிறிதளவு இன்றைய தினம் புதியதாக வாங்கி, உங்கள் சமையலறையில் இருக்கும் டப்பாவில் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். ஆயுத பூஜை அன்று பூஜையில் வைத்து வழிபட்ட அஞ்சறைப் பெட்டியில், விஜயதசமியன்று மசாலா பொருட்களை நிரப்ப மறந்துவிடாதீர்கள்.

kubera-hundi

அடுத்தபடியாக, உங்களுக்கு இருக்கக்கூடிய ஏதோ ஒரு பிரச்சனையை நீண்ட நாட்களாக மாற்ற வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். உங்களுடைய கெட்ட குணங்களை மாற்ற வேண்டும் அல்லது தினமும், காலையில் எழுந்திருக்க வேண்டும் சில பேர் நிறைய குறிக்கோளை வைத்திருப்பார்கள். இப்படியாக குறிக்கோளை எடுப்பார்கள். ஆனால், அதை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல மாட்டார்கள். ஓரிரு நாட்கள் செய்து விட்டு, அதைத் தூக்கி தூரப் போட்டு விடுவார்கள்.

- Advertisement -

hundi

இப்படியான உறுதிமொழியை பொதுவாக புத்தாண்டில் தான் நாம் எடுப்போம் அல்லவா? அதேபோல்தான் இந்த விஜயதசமி தினத்தன்று, நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் கொண்டு வரப் போகும் மாற்றத்திற்கான உறுதிமொழியையும் எடுத்துக்கொள்ளலாம். ‘இத்தன நாளா நீங்க ட்ரை பண்ணி, தோத்துப்போன எந்த காரியமாக இருந்தாலும் சரிங்க!’ இந்த விஜயதசமிலருந்து ட்ரை பண்ண, கண்டிப்பா சக்சஸ் தான்.

praying-god

உங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கத்தை தூக்கி வெளியே போட வேண்டும் என்றாலும், இந்த தினத்தில் தூக்கி போட்டு விடுங்கள். உங்களுக்கு என்ன நல்லது வேண்டுமோ அதை இறைவனிடம் வரமாக கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அந்த வரம் உங்களது வாழ்க்கையை நிச்சயம் மாற்றும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த நாள் தான் இந்த விஜயதசமி.

sucess

விஜயம் என்றால் ஜெயம். வாழ்க்கையில் ஜெயித்து படிப்படியாக முன்னேற்றம் அடைவதற்கு, என்ன தேவையோ அதை இன்று தொடங்கி தான் பாருங்களேன்! அடுத்த வருடத்திற்குள் உங்களது வாழ்க்கை ஒரு படி மேலே உயர்ந்து இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -