இப்படி ஒரு சால்னாவை உங்கள் வாழ்நாளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே முடியாது‌. ரோட்டு கடை சால்னாவை விட, இந்த சால்னாவுக்கு சுவை அதிகம்.

- Advertisement -

சால்னா என்றாலே பரோட்டா சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சுவையாக தான் இருக்கும். குறிப்பாக ரோட்டு கடைகளில் விற்கும் சாய்னாவின் சுவை நம் நாக்கில் ஒட்டிக்கொள்ளும். ரோட்டுக் கடையில் விற்கும் அதே சுவையில் ஒரு சால்னாவை நம் வீட்டிலும் வைத்தால் எப்படி இருக்கும்? சொல்லப்போனால் ரோட்டுக்கடை சால்னாவை விட, நீங்கள் வைக்கக்கூடிய இந்த சால்னாவுக்கு டேஸ்ட் தூக்கலாதா இருக்கும். ஒரே ஒரு வாட்டி இப்படி, சால்னா குழம்பு உங்கள் வீட்டில் வைத்து பாருங்கள். மீண்டும் மீண்டும் இதே சால்னா குழம்பை வைத்து கொண்டே இருப்பீர்கள். அந்த அளவிற்கு உங்களுடைய நாவில் இந்த குழம்பின் ருசியை ஒட்டிக் கொள்ளும் என்பதில் சந்தேகமே கிடையாது. சரி ரெசிபியை பார்த்து விடலாமா?

salna1

Step 1:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் வரமல்லி – 2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், மிளகு – 1/4 ஸ்பூன், ஏலக்காய், பட்டை, கிராம்பு, எல்லாவற்றிலிருந்தும் இருந்து – 1, வரமிளகாய் – 3, கசகசா – 1 ஸ்பூன், முந்திரி பருப்பு – 3 இவைகள் அனைத்தையும் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொருட்களெல்லாம் அப்படியே ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துவிடுங்கள்.

- Advertisement -

Step 2:
அடுத்தபடியாக அதே கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம் – 8 பல், பூண்டு தோலுரித்து – 6 பல், இஞ்சி – சிறிய துண்டு, தேங்காய் துருவல் – 1/2 மூடி, இவைகளை சேர்த்து மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வரை நன்றாக வதக்க வேண்டும்.

onion

Step 3:
இப்போது முதலாவதாக வறுத்து தட்டில் ஆற வைத்திருக்கும் மசாலா பொருட்களையும், இரண்டாவதாக வதக்கி வைத்திருக்கும்  பொருட்களையும், மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுது போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

Step 4:
அடுத்தபடியாக குழம்பு தாளிக்க ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொண்டு, 2 குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் பட்டை – 1, லவங்கம் – 1, அன்னாசிப்பூ – 1, போட்டு தாளித்துக் கொள்ளவும். அடுத்தபடியாக பெரிய வெங்காயம்-2 நீள்வாக்கில் வெட்டியது, கருவேப்பிலை – 1 கொத்து, புதினா – 1/2 கைப்பிடி அளவு, மல்லித்தழை  1/2 கைப்பிடி அளவு போட்டு மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வதக்கிய பின்பு, பழுத்த தக்காளி பழம் 2, பொடியாக நறுக்கி போட்டு நன்றாக வதக்க வேண்டும். கடாயில் இருக்கும் இந்த பொருட்கள் அனைத்தும் தொக்கு பதத்திற்கு வந்தவுடன், அதில் 1/4 ஸ்பூன் அளவு தனி மிளகாய் தூள், உப்பு போட்டு வதக்கி அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் சேர்த்து விட வேண்டும்.(புதினா மிக மிக அவசியம்.)

pudina

Step 5:
விழுது சேர்த்து 3 நிமிடங்கள் எண்ணெயில் நன்றாக வதங்க வேண்டும். அரைத்த விழுதை, கடாயில் இருக்கும் மற்ற பொருட்களோடு ஒன்றாக சேர்ந்து வதங்கி, நீங்கள் ஊற்றிய எண்ணெய் நன்றாக பிரிந்து வெளியில் கிக்கி வந்த பிறகுதான், சால்னாவுக்கு தேவையான தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு மிதமான தீயில் ஆறிலிருந்து ஏழு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். நீங்களே நம்ப மாட்டீங்க! இந்த சால்னாவை நீங்கள்தான் செய்தீர்களா? அப்படி என்று! அப்படி ஒரு வாசம் வீசும், அப்படி ஒரு சுவை இருக்கும். உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல முக்கியாமான இந்தப் பொருள எல்லாம் ரொம்ப நாள் வச்சுக்க முடியலையா? அப்படின்னா இத செஞ்சு பாருங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -