உங்க வீட்ல முக்கியாமான இந்தப் பொருள எல்லாம் ரொம்ப நாள் வச்சுக்க முடியலையா? அப்படின்னா இத செஞ்சு பாருங்க!

veggitables
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் முக்கியாமான சில பொருட்களை பாதுகாப்பாக பத்திரப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல் நாம் சில சமயங்களில் குழம்பிப் போவோம். சிறு சிறு விஷயங்களை கூட அந்த நேரத்தில் சட்டென நமக்கு ஞாபகம் வராது. இவற்றை இப்படி கூட சேமிக்க முடியுமா? என்பது போல இந்த உபயோகமான வீட்டு டிப்ஸ் உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். நாம் தினம் தினம் உபயோகிக்கும் வீட்டு பொருட்களை கெட்டு போகாமல் நீண்ட நாட்கள் எப்படி பயன்படுத்துவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

kungumam

குங்குமம்:
நாம் பூஜை அறையில் பயன்படுத்தும் குங்குமம் அதிக நாட்கள் உபயோகிக்க முடியாது. சிறிது நாட்கள் ஆனதும் அதில் வண்டுகள் வர ஆரம்பித்து விடும். குங்குமம் கெட்டு போய் விட்டு உபயோகம் இல்லாமல் போய் விடும். இதனால் குங்குமத்தை வாங்கியவுடன் அதனை காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி விட்டு அதில் 2 துண்டு கற்பூரத்தையும் போட்டு வையுங்கள். அதிக நாட்கள் ஆனாலும் குங்குமம் பிரஷ்ஷாக அப்படியே இருக்கும்.

- Advertisement -

தக்காளி:
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி மிகவும் முக்கியமானது. தினந்தோறும் தக்காளி இல்லாமல் சமையலே ஓடாது. இருந்தாலும் தக்காளியை நம்மால் அதிக நாட்கள் பத்திரப்படுத்தி வைக்க முடியவில்லை. இதற்கு புதிதாக ஒரு தீர்வு உண்டு. வாங்கிய தக்காளியை அப்படியே கொண்டு போய் வைக்காமல் ஒரு முறை தண்ணீரில் கழுவி காயவிட்டு பின்னர் நீங்கள் எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்கலாம். அப்படி வைக்கும் பொழுது அதனுடைய காம்பு பகுதி கீழ்பக்கமாக கவிழ்த்து வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். வேகமாக அழுகுவது தடுக்கப்படும். தக்காளியின் காம்பு பகுதி மட்டும் செலோடேப் போட்டு ஒட்டி வைத்தாலும் கெட்டுப் போகாது.

ginger 3-compressed

இஞ்சி:
இஞ்சியை வீட்டில் அதிகமாக பயன்படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கலாம். இஞ்சி போட்டு சமைக்கும் பொழுது அந்த சமையலே தனி சுவையை தரும். மேலும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். இஞ்சி டீ தினமும் குடிப்பவர்களுக்கு எளிதில் சளி பிடிக்காது. அப்படி அன்றாட சமையலில் பயன்படும் இஞ்சி அதிக நாட்கள் பாதுகாக்க முடியாது. அதற்கு என்ன செய்யலாம்?

- Advertisement -

இஞ்சியை அதிக நாட்கள் பாதுகாப்பாக வைக்க அதனை வாங்கி வந்த உடன் தண்ணீரில் ஊற வைத்து அதில் இருக்கும் மண்ணெல்லாம் போக விட்டு கழுவி விடுங்கள். அப்படி கழுவும் பொழுது அதில் இருக்கும் ஒவ்வொரு கிளை பகுதியும் தனித்தனியாக உடைத்து எடுத்து கழுவ வேண்டும். பின்னர் டிஷ்யூ பேப்பரில் அல்லது காட்டன் துணியில் நன்றாக காய வைத்து எடுத்து வையுங்கள். அவ்வளவு தான் எவ்வளவு நாள் ஆனாலும் பூஞ்சை பிடிக்காமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

coriander-chilli-zip-lock-cover

பச்சை மிளகாய்:
பச்சை மிளகாயை 20 நாட்களுக்கும் மேலாக பாதுகாப்பாக வைப்பதற்கு வாங்கி வந்தவுடன் முதலில் அதன் காம்புகளை நீக்கி விட வேண்டும். காம்புகளோடு இருந்தால் அதி விரைவாகவே அழுகிவிடும். எனவே காம்புகளை நீக்கி விட்டு சுத்தமான துணியில் சுற்றி அதன் பின்னர் காற்று புகாத டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைக்கலாம். அல்லது ஃஜிப்லாக் கவரிலும் போட்டு வைக்கலாம். மேலும் டப்பாவில் இருக்கும் பெருங்காயம் கட்டியாகாமல் இருக்க சிறிய பச்சை மிளகாய் காம்பு நீக்காமல் அப்படியே போட்டு விடுங்கள். பெருங்காயம் பஞ்சு போல் அப்படியே இருக்கும்.

இதையும் படிக்கலாமே
நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் காய்கறி சூப்பை வித்யாசமாக ஈஸியாக எப்படி செய்வது? வேற லெவல் டேஸ்டா இருக்கும்! நீங்களும் செஞ்சு பாருங்க.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -